உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் 12

நேராமல், என் மகளையும் அவள் காதலனையும் உயிர் தப்பச் செய்வாயென்று நம்புகின்றேன்.

தங்கம் : அம்மா, அதுபற்றித் தங்கள் சிறிதும் ஐயுறவு காள்ளல் வேண்டாம். இன்னுமொன்று தங்கள் மேலும் அருமைத் தோழி நீலத்தின் மேலும் நம்மரசர் ஐயுற்றுச் சினவாதிருக்கும் பொருட்டுத் தங்கை அமராவதி கைப்பட “யான் என் கணவனாரைச் சிறையினின்றும் அழைத்துக் கொண்டு வெளியே செல்கின்றேன்” என்றொரு நறுக்குயெழுதி வாங்கி, அதனை அரசர் அணிந்திருக்குஞ் சட்டைப் பையினுட் செருகி விட்டு அதனுள்ளிருக்குஞ் சிறைக்களச் சாவியினை எடுத்துக் கொணர்ந்து, தோழி நீலத்தின் கையிற் கொடுத்து விடுங்கள். அவள் அம்பிகாபதியாரைக் காவலர் அறியாமற் சிறையினின்றும் விடுவித்து யான் முன் சொன்ன காளி கோட்டத்திற்கே அவர் இன்று நள்ளிரவிற் போம்படி செய்வள்.

அரசி : நல்லது, சிறைக் காவலனையும் வாயில் காவ லனையுங் கடந்து அம்பிகாபதி செல்வது எங்ஙனம்?

தங்கம் : இத்தூக்க மருந்தையே அவர்கட்குங் கொடுக்க ஏற்பாடு செய்தாயிற்று.

அரசி : ஆயினும், ஊர்க் காவலரை அம்பிகாபதி தப்பிச் செல்ல யாது செய்தாய்?

தங்கம் : கம்பர் காளி கோட்டத்தின் கண் இருப்பர்; அம்பிகாபதி அங்கு சென்றவுடன், தன் மகள் காவேரியின் ஆடையை அவர் உடுக்கும்படி செய்வித்து, அவரை யழைத்துக் காண்டு எமதில்லத்திற்கு வந்து விடுவர். இன்றைக்குப் பதினைந்து நாழிகைக்கு மேற்றான் நிலவு புறப்படும். ஆகையால், முன்னேரத்தில் இவர்கள் எவராலுந் திட்டமாயறியப் படாமல் எங்கள் இல்லம் வந்து சேர்தலும், பின்பு அங்கிருந்து வெளி நாட்டுக்கு உடனே புறப்படுதலும் எளிதில் முடியும்.

அரசி : நல்லது, என் மகளும் அம்பிகாபதியும் மட்டும் வெளிநாடு செல்வரோ? கம்பரும் உடன் செல்வரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/235&oldid=1581168" இலிருந்து மீள்விக்கப்பட்டது