உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

203

தங்கம் : கம்பரும் அவர் மகள் காவேரியும் அம்பிகாபதி யாரைப் பிரிந்திருக்க மாட்டாமல் அவருடன் செல்லவே உறுதி செய்திருக்கின்றனர்.

அரசி : கம்பருங் காவேரியும் உடன் செல்வதறிந்து என்னுள்ளம் பெரிதும் ஆறுதலடைகின்றது. வழிச் செலவுக் காக இந்த ஆயிரம் பொன்னையுங் கம்பர் கையில் கொடு. நீயும் நீலமும் நயினாருஞ் செய்யும் இவ்வரும் பேருதவி இனிது நிறைவேறுமாறு அம்மையப்பர் அருள் புரிக! என் மகளும் அம்பிகாபதியுங் கம்பர் காவேரியுடன் வாய்ப்பான இட ஞ் சென்று இனிது வாழ்க என்று சிவபிரான் பிராட்டியாரை வேண்டு வோமாக! நாளை முதல் சில நாட்கள் வரையில் இவ்விடம் பெருங் குழப்பத்தில் இருக்கும்! உன்னை ம் இங்கு வரும்படி நான் ஆள் விடுக்கும்போது மட்டும் நீ இங்கு வா - இனி நிகழப் போவனவெல்லாம் நின்னுள்ளத்தே புதைந்து மறைந்து கிடப்பனவாக! நீ இப்போது செவ்வனே வீடு போய்ச் சேர்! (தங்கம் வணங்கிப் போய்விடுகின்றாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/236&oldid=1581169" இலிருந்து மீள்விக்கப்பட்டது