உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

களம்

ஐந்தாம் நிகழ்ச்சி : ஐந்தாம் காட்சி

புகழேந்திப் புலவர் மாளிகை

காலம் : குறைநிலாக் காலத்தொருநாள் முன்னிரவு

ங்கு

தங்கம் : அம்மா அமராவதி, நீ ஏன் இவ்வளவு நடுங்கு கின்றனை? நின் கணவர் இன்னுஞ் சிறிது நேரத்தில் வந்துவிடுவர்.

அமராவதி : அக்கா, முன்னொருகால் என் கணவர் காளி கோயிற் பக்கத்துள்ள மதின்மேலேறி என்பால் வந்து மீண்டுசென்றபோதுதான் காளிகோயிற் பக்கமாய்ச்

னர்!

சுற்றிவந்த நகர்க்காவலர் அவரைப் பிடித்துக்கொண்ட அங்ஙனமே இப்போதும் நேர்ந்துவிட்டால் என் செய்வதென்று தான் என் நெஞ்சந் துடிக்கின்றது!

தங்கம் : கண்மணி கலங்கவேண்டாம். அம்பிகாபதியார் சிறையில் அடைக்கப்பட்ட பின் காவலரெல்லாஞ் சிறைக் களப் பக்கமாகவே நிற்கின்றனரென்றுங், காளிகோயிற் பக்கம் எவருஞ் செல்வதில்லை யென்றும் முன்னமே தெரிந்து கொண்டுதான் இம்முயற்சியில் இறங்கினோம்.

அமராவதி : அருமை அக்கா, நீ செய்யும் இப்பேருத விக்கு வானகமும் வையகமு மாற்றலரிது!

தங்கம் : அங்ஙனஞ் சொல்ல வேண்டாம் அம்மா. நீங்கள் செய்த பேருதவியினாலன்றோ என் தந்தையார் புகழ் பொருள் வளம் பெற்று விளங்கினார்! இன்னும் யாங்கள் ஏதொரு குறையுமின்றி யுயிர் வாழ்கின்றோம்! காலந்தவறாத மழைக்கும் உங்களுதவிக்குங் கைம்மாறு ஏது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/237&oldid=1581170" இலிருந்து மீள்விக்கப்பட்டது