உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

205

அமராவதி : ஆனாலும், என்னால் உனக்கொரு மனக் குறை நேர்ந்து விட்டதன்றோ?

தங்கம் : அதென்ன கண்மணி?

அமராவதி : அக்கா, நீ என்னைவிட அழகிலுங் குணத் திலுஞ் சிறந்த நங்கையாயிருந்தும், அம்பிகாபதியார் நின் அழகையுங் குணத்தையும் மிக வியந்து பாராட்டுபவரா யிருந்தும், என்னாலன்றோ நின்னை அவர் மணந்து கொள்வ தற்கு ஒரு பேரிடையூறு தோன்றலாயிற்று!

தங்கம் : அம்மா, என்னுடன் பிறந்த தங்கை ஒருத்தி யிருப்பாளானால், அவளினும் உன்னையே என்னுயிர்க் குயிராய் நினைத்து அன்பு பாராட்டி வருகின்றேன் என்ப தனை நீயே நன்கறிவாய்.

அமராவதி : அதிற் சிறிதும் ஐயமில்லை. நின்பாலுள்ள எனது அன்பு நிலையும் அத்தகையதே.

தங்கம் : கண்ணே, உன்னிலும் யான் அழகிலுங் குணத்திலுஞ்” சிறந்தவளென்பது ஒப்புக்கொள்ளத்தக்க தன்று. உன்னை அம்பிகாபதியாரும், அம்பிகாபதியாரை நீயும் நேரிற் கண்டபின் நீங்களிருவீரும் ஒருவர் மேலொருவர் காதல் கொள்ளாதிருத்தல் சிறிதும் இயலாததேதான். நுங்கள் காதற் கிழமையினை யான் சிறிதும் அறியேன். எனது பெதும்பைப் பருவத்திலேயும் யான் அம்பிகாபதியாரைக் காதலித்து வந்தேன்; யான் மங்கைப் பருவம் அடைந்த பின் என் பெற்றோர்கள் என்னை அம்பிகாபதியார்க்கே மணஞ் செய்து கொடுக்க உறுதி செய்திருந்தனர்; அதுவே நெருப்பில் நெய் சாரிந்தது போல் இயற்கையே எனதுளத்தில் அவர் மேலிருந்த காதலை மூண்டெரியச் செய்தது! என்னால் தாங்க முடியாத நிலைமைக்கு வந்த அக்காதலைச் சின்னாட்களுக்கு முன் என் வாய்விண்டு

நாணமுந் துறந்து அவர்க்கு

சொல்லுதலுஞ் செய்தேன்! ஆனால் அவர் மிக மென்மையான சொற்களால் தாம் என்னை மணக்கக் கருதாமையினைத் தெரிவித்து விட்டார்; அப்போதென் ஆவியோ நிலை கலங்கியது! அவர் எங்ஙனமோ என் ஆற்றாமையினைத் தணியச் செய்தார். பின் நாட்களில் அவர் நின்னைக் காதலித்திருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/238&oldid=1581171" இலிருந்து மீள்விக்கப்பட்டது