உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் 12

தரிந்து எனதாற்றாமையினை ஒருவாறு ஆற்றிக் கொண்டேன். நீங்களிருவீரும் ஏதோர் இடரும் இன்றி ஒருங்கு பொருந்தி இனிது வாழவேண்டுமென்றும், அதற்காம் முயற்சிகளை யான் நெஞ்சாரச் செய்யவேண்டு மென்றும் எண்ணி, அவ்வெண்ணத்திலேயே எனது நினைவைச் செலுத்தி வருகின்றேன். ஆகையால், நின்னால் எனக்கொரு மனக் குறையுமில்லை. நுங்கள் நன்மையின் பொருட்டு எதுவுஞ் செய்யத் துணிந்து நிற்கின்றேன்!

அமராவதி : அருமை அக்கா! இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உயிராய் நிற்கும் ஒரு பெருங் காதலின்பத்தை என் பொருட்டு நீ துறந்து விட்டது. வேறு பெண் மக்கள் எவராலும் செய்தற்கு இயலாதது! என்னே! நின் மனத்தூய்மை! என்னே! நின் பேரன்பின்திறம் (இச் சொன் முடிவிற் கம்பர் அம்பிகாபதி காவேரியுடன் வருகின்றனர்)

தங்கம் : (மெல்லிய குரலில்) மாமா, அத்தான் வர வேண்டும் (வணங்குகிறாள்) கண்ணே காவேரி, (அவளை அணைத்துக்கொண்டு) முன்னே முன்னே எனக்கு மைத்துனனா யிருந்த நின் தமையனார் இப்போதெனக்கு மைத்துனியாய் விட்டார்.

(புன்முறுவல் செய்கின்றாள். அமராவதியும் வந்து இருவரையும் வணங்கிக் காவேரியைத் தழுவிக் கொள் கின்றாள். இந்நேரத்தில் நயினார் பிள்ளை கதுமென வரு கின்றான்.)

நயினார் : (கம்பரை வணங்கி) வணங்கி) ஐயனே! ன! சகடமுங் குதிரைகளும் பின்வாயிலில் வந்து நிற்கின்றன. சிறிதும் நேரம் போக்கலாகாது. இரவு பதினைந்து நாழிகையாய் விட்டது! ன்னும் இரண்டு ரண்டு நாழிகையில் நிலவு வெளிப்படும்; அதற்குள் நீங்கள் எல்லாம் இத்தஞ்சைநகர் எல்லையைக் கடந்து நெடுந்தொலைவு விரைந்து ஏகிவிடல் வேண்டும்!

(எல்லாரும் விரைகின்றனர்.)

அமராவதி : (தங்கத்தை தழுவி) அருமை அக்கா, உன்னை எங்களுடன் கொண்டுபோக கொண்டுபோக யான் மிக விழைந்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/239&oldid=1581172" இலிருந்து மீள்விக்கப்பட்டது