உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

207

னி

நோயாய்க் கிடக்கும் நம் அன்னையார் பொருட்டு நின்னை இங்கேயே விட்டு யாங்கள் செல்ல வேண்டியதாகின்றது. இனி உன்னையும் அம்மையையும் எப்போது காண்பேன்! என் தந்தையால் உங்கட்கு யாது தீங்கு நேருமோ! (கண்ணீர் உதிர்க்கின்றாள்)

தங்கம் : அழாதே கண்ணே! எங்கிருந்தாலும் வருவது வரும்! இறைவனருளை நம்பி எதற்குங் கலங்காமலிருக்க வேண்டும். உங்களுயிர் தப்பினால் அது வே எனக்குப் போதும்.

6

(காவேரியும் அம்பிகாபதியும் நயினாருமெல்லாம் பிரிதலாற்றாது பெரிதுங் கண்கலுழக் கம்பர் எல்லாரையும் ஆற்றுவிக்கின்றார்.)

அம்பிகாபதி : (நயினாரைக் கட்டித்தழுவி) என்னாருயிர்ச் சல்வா! உன்னை இனி என்னுயிரொடு காண்பேனா? நம்மன்னர் உனக்கு யாது தீங்கு இழைப்பரோ என்பதை நினைக்க என்னுடலும் உயிரும் ஒருங்கே நடுங்குகின்றன! அப்பா, உன்னைப் போல் ஒரு நண்பனை எப்பிறப்பிற் காண்பேன்! நீயும் எங்களுடன் வராலாகாதா?

இருவரும் அழுது கதறுகின்றனர்; இருவரையுங் கம்பர் தேற்றுகின்றார்.)

நயினார் : (ஒருவாறுதேறி) அம்பிகாபதி, என்னாருயிர்த் துணைவா, கல்விக் களஞ்சியமே, கலைக்கு நிலைக்களமே. நின்னைப் பிரிந்த இந்நகர் உயிரையிழந்த வெற்றுடலே யாகும்! உன்னைப் பிரிந்து யான் உயிரோடிருந்தென் செயப் போகின்றேன். யான் என்னருமைத் தந்தையின் பொருட்டு இங்கிருப்பினும், என்னுயிர் நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களைப் பின்றொடர்ந்தே வரும்.

(இது சொல்கையிற் காவேரியை நோக்கித் தேம்பக், காவேரியும் இவனை நோக்கித் தேம்புகின்றாள்.)

கம்பர் : (எல்லாரையுந் தேற்றி) அம்பிகாபதி, நம் அமைச்சர்க்கு நயினார் ஒரே புதல்வன்; அமைச்சரும் என் போல் ஆண்டில் முதிர்ந்துவிட்டார்; அருகிருந்து அவர்க்கு வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/240&oldid=1581173" இலிருந்து மீள்விக்கப்பட்டது