உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் 12

இவன்

உதவிகளைச் செய்யவேண்டிய இப்பருவத்தில் நம்முடன் வருதல் நன்றா? மேலும் நம்மருமைத் தங்கத்திற்கும், நோயாய்க் கிடக்கும் அவளன்னைக்கும் இவனன்றோ உற்ற துணையா யிருந்துதவி செய்து வருகின்றான்? இறைவனரு ளிருந்தால் நாமெல்லாம், மீண்டும் ஒருங்கு கூடுவம். எல்லாரும் நெஞ்சைத் தேற்றிக் கொள்ளுங்கள்! (காவேரியின் தோழி பச்சையை நோக்கி) அம்மா அம்மா பச்சே! நீ பச்சே! நீ நம்மருமைத் தங்கத்துடனேயே யிருந்து அவர்கட்குற்ற துணையாய் உயிர் வாழக்கடவாய்! (அவளுந் தங்கமும் வணங்கக் கம்பர் ஏனையெல்லாருடனும் பின்வாயிலிற் சன்று

ஏறுகின்றனர்.)

சகடம்

நயினார் : (கம்பரை வணங்கி) ஐயனே. இன்னும் எனக்கு யாது கட்டளை?

கம்பர் : மகனே, நம்மன்னன் நாங்கள் சென்று வைகும் இடத்தைத் தெரிந்துகொள்ளப் பெருமுயற்சி செய்வான். நாங்கள் அவனிலும் வலிய துணையைச் சார்ந்து வாழும் வரையில் யாங்கள் இருக்குமிடம் எவர்க்குமே தெரியா திருக்கட்டும். சில திங்கட்குப் பின் இச்சகடவலவனே எனது திருமுகத்தை உன்னிடங் கொணர்வன். அதன் பின் இவன் வழியாகவே இங்கு நேரும் நிகழ்ச்சிகளை வரைந்து நின் திருமுகத்தை எனக்கு விடு! (கம்பர் தம் மகன், மகள், மருமகளுடன் வண்டியில் இவர, வண்டி விரைந்தேகி விட்டது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/241&oldid=1581174" இலிருந்து மீள்விக்கப்பட்டது