உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

களம்

ஐந்தாம் நிகழ்ச்சி : ஆறாம் காட்சி

சோழன் அரண்மனை

காலம் : அடுத்த நாட் காலை

டை

சோழன் : (துயில் நீங்கி எழுந்து தனக்குள்) வழக்க மாய்ப் பகலவன் கீழ்பால் எழுகையிலேயே துயிலுணர்ந் தெழும் யான், இன்றைக்கோ விடிந்து ஐந்து நாழிகைக்குப் பின்னால் எழலானேன்! ஆ! எவ்வளவு அயர்ந்த தூக்கம்! எவ்வளவு இனிய துயில்! என்ன! கவலை நெஞ்சம் உடை யார்க்கு இத்தனை அயர்ந்த தூக்கம் வருவதுண்டா? அந்தப் பயல் அம்பிகாபதி எனக்குச் செய்த மானக்கேடான செயலை எண்ணி எண்ணி என்னெஞ்சம் எறும்பிடைப்பட்ட புழுப்போல் துடிக்கையில், எனக்கு உறக்கம் எப்படி வரக்கூடும்? அவனை என் கத்திக்கு இரையாக்கினாலன்றி என் கண்கள் துயிலாவே! (தன் சட்டைப்பையை உற்று நோக்கித் தடவி) ஆ! என்னை இது! அம்பிகாபதியை அடைத்த சிறைக்களச் சாவியைக் காண் கிலேனே! சாவியிருந்த இடத்தில் ஏதோ ஒன்று தட்டுப்படு கின்றதே! (அமராவதியின் ஓலை நறுக்கை வெளியேயெடுத்து இறும்பூதுடன் நோக்குகின்றான்) “யான் என் கணவனாரைச் சிறையினின்றும் அழைத்துக் கொண்டு வெளியே செல்கின்றேன்” இதனை எழுதினவள் யார்? என் மகள் அமராவதியா? அவளது கையெழுத்துத்தான் இது! ஏ! அமராவதி நீ என் மகளா? ஓர் ஒச்சப் பயலைக் களவிற் புணர்ந்த நீ வேசியேயன்றோ? நீயும் அந்தக் அந்தக் கள்வனும் எனது ஆளுகையினைத் தப்பி எங்குப் போய் விடுவீர்கள்? இதோ! உங்களிருவரையும் பிடித்துக் கொணர்வித்து நீற்றறையிலிட்டு நீறாக்கி எனது பழியைத் தீர்த்துக் கொள்கின்றேன் பார்! யாரேடா அங்கே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/242&oldid=1581175" இலிருந்து மீள்விக்கப்பட்டது