உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

❖ LDM MLDM-12 →

கடம்பன் : (ஓடி வந்து) பெருமான் நீடு வாழ்க! கட்டளை?

சோழன் : அடே! சிறைக்காவலர், நகர்க் காவலர் அனை வரையும் உடனே இங்குவருவி! (போய் அவரெல்லாருடனும் வந்துவணங்க அரசன் சிறைக்காவலனை நோக்கி) அடே! அம்பிகாபதி நமது அரண்மனைச் சிறையிலிருக்கின்றானா?

சிறைக்காவலன் : (நடுக்கத்துடன்) அரசே! தஞ்சம்! அம்பிகாபதி சிறை வீட்டில் இல்லை! எப்படியோ தப்பிப் போய்விட்டான்! சிறை வீட்டின் சாவி தங்களிடம் இருக்க அஃதெப்படித் திறக்கப்பட்டது! இது மாயமாயிருக்கின்றதே!

சோழன் : (தனக்குள்) ஈதெனக்கும் புலனாகவில்லை! (அவனை நோக்கி) நல்லது! சிறைவீடு திறக்கப்பட்டு, அவன் வெளியே போகும் வரையில், மடையா, நீ என் செய்தாய்! சிறைக்காவலன் : (நடுங்கி) பெருமானே! சிறைக் காவலில் என்றுங் கண்ணிமையுங் கொட்டாத இந்த ஏழை நேற்றிரவிலோ என்னையறியாமலே அயர்ந்துறங்கிவிட்டேன்!

சோழன் : (தனக்குள்) யானும் அங்ஙனமே தான் தூங்கி விட்டேன்! இதில் ஏதோ சூது நடந்திருக்கின்றது! இவன் மேற் குற்றஞ் சொல்லுவதிற் பயனில்லை. (நகர்க் காவலரை நோக்கி) ஏ! நகர்க் காவற்புலிகளே! சிறை வீட்டுக்கு வெளியே வந்த அம்பிகாபதியை நீங்கள் எங்ஙனந் தப்ப விட்டீர்கள்?

நகர்காவலர் : (அச்சத்துடன்) மன்னர் பிரானே தங்கள் கட்டளைப்படியே யாங்கள் சிறைவீட்டுக்கு வெளியே நேற்றிரவெல்லாங் கண்ணிமைகொட்டாமலே காவல்

செய்து நின்றோம். ஆனால்

அம்பிகாபதியேனும்

வேறெவரேனும் அரண் மனைச் சிறைக்களத்துக்குப் புறம்பே வரயாங்கள் காண வில்லையே!

சோழன் : நல்லது, நீங்களெல்லீரும் போகலாம் (எல் லாரும் போய்விடத் தனக்குள்) இஃதொரு பெருமாயமாய் இருக்கின்றது! நுண்ணறிவிற் சிறந்த ஒட்டக்கூத்தரை வருவித்துக் கேட்டால் உண்மை வெளியாகிவிடும். அடே கடம்பா, ஒட்டக்கூத்தர் பாற்சென்று, அவரை உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/243&oldid=1581176" இலிருந்து மீள்விக்கப்பட்டது