உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

211

வரு

இங்கழைத்துவா! (அவன்போய் அவரை அழைத்து கிறான்) பெருமான், வரவேண்டும்! இருக்கையில் அமருங்

கள்!

கூத்தர் : குழந்தாய்! இத்தனை விடியற் காலையில் யாது நேர்ந்தது?

சோழன் : அரண்மனைக்குப் புறத்தேயுள்ள சிறைக் கோட்டத்தில் அடைப்பித்திருந்தால் அம்பிகாபதி தப்பிப் போய் விடுவா னென்றெண்ணி, இவ்வரண்மனைக்குள்ளேயே ஓர் அறையில் அவனைச் சிறையிடுவித்து, அவ்வறையின் சாவி யினையும் யானே என் சட்டைப் பையினுள் வைத்திருந்தேன். விடியற்காலையில் எழுந்து பார்க்க அச்சாவியைக் காணேன், அ இந்த ஓலை நறுக்குத்தான் இருந்தது (அதனை அவர்க்கு நீட்டுகின்றான்.)

கூத்தர் : (அதனை வாங்கிப் பார்த்து) ஐயகோ! இப்பேர சுக்குப் பேராப் பெரும்பழி வந்துவிட்டதே! ‘அம்பிகாபதியை இவ்வரண்மனையில் அணுகவிடாதே' என்று யான் அன்று கூறிய அறிவுரையைச் செவியேற்றாயில்லையே! இருவரும் இந்த நகரை விட்டு நெடுவழி சென்றிருப்பார்களென்பதிற்றட்டில்லை. அருமை மகளை அவன் எங்கே கொண்டு போய் எவ்வாறு அலைக்கழிப்பானோ! அரசே, இப்போதென்ன செய்யப் போகின்றாய்?

சோழன் நாற்புறமும் என் படைஞர்களைப் போக்கி அவர்களைப் பிடித்துக் கொணர்விக்கக் கருதுகின்றேன்.

கூத்தர் : நல்லது. காலந்தாழாதுடனே அதனைச் செய்! கம்பர் எங்கிருக்கின்றார், என்பதை உடனே தெரிந்து கொள். அவர் தம்மகனைத் தம்முயிராய்க் கொண்டவர்; அவரும் அவர்களுடன் சேர்ந்தே போயிருப்பர்; அவருங் கூடப் போயிருந்தால், நம்மினும் வலிய ஓர் அரசனின் உதவியை அவர் நாடிக்கொள்வர்!

சோழன் : அடே கடம்பா, நம் ஏவலரை விடுத்துக் கம்பர் எங்கே யிருக்கிறாரென்பதை உடனே தெரிந்து வரச் செய்!

(அவன் அங்ஙனமே செய்ய, ஏவலர் போய் வந்து நிகழ்ந்ததை அறிவித்து விட்டனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/244&oldid=1581177" இலிருந்து மீள்விக்கப்பட்டது