உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

213

வேகின்றது! மானங்கெட் டுயிர்வாழ என்னுள்ளம் ஒருப் படாது!

L

66

கூத்தர் : சொல்லுகிறேன் கேள்! நயினான் அம்பிகா பதிக்கு உயிர்த்தோழன். அவனை வருவித்து, ஆறு திங்க ளுக்குள் அம்பிகாபதியும் அமராவதியும் இருக்குமிடந் தெரிந்து, அவர்களை இங்கே கொணர நீ வழி செய்யாவிட்டால், நீ நின் உயிரை இழப்பாய்! நின்னாலன்றோ என் மானத்தையும் மகளையும் இழந்தேன்!" என்று அவற்கு வலியுறுத்திச் சொல். தன் உயிர்த்தோழன் தன்னால் உயிரிழக்க நேருமென்பது தெரிந்தால், அதனை மாற்ற அம்பிகாபதி இங்கு வந்து டுவான். அதன்பின் அவனை நீ வேண்டியபடி ஒறுக்கலாம். அவர்களைத் தேடிப்பிடிக்க இப்போது நீ விடுக்கும் படைஞர்கள் அவர்களைக் கண்டுபிடித்தல் இயலாமல் திரும்பி விடுவார்களானால், நாற்புறமும் உள்ள நாடு நகரங்களுக்கு வேவுகாரரைப் போக்கி அவர்களிருக்குமிடத்தைத் தெரிந்து கொள்! அம்பிகாபதியிடமிருந்து நயினாருக்கு எவரேனுஞ் செய்திகொண்டு வருகின்றனரா என்பதையும் ஒற்றர்களை வைத்து முயன்று பார்! இதற்கிடையில் யாது நேர்கின்றதெனப் பார்ப்போம். அங்கயற்கண்ணி தன் மகளைக் காணாமல் ஆறாத்துயர்க்கடலில் ஆழ்ந்திருக்குமாதலால், நின் மகள் மேலும் அம்பிகாபதிமேலும் நீ கொண்ட சினத்தையுஞ் சீற்றத்தையும் அங்கே காட்டாதே! என் சொற்கடவாது நடந்தால் நீ கருதியது கைகூடும்.

நீ

சோழன் : : அண்ணலார் கட்டளைப்படியே நடந்து கொள்கிறேன். இனி நீங்கள் இல்லஞ் செல்லலாம். (எழுந்து வணங்கக் கூத்தர் போய்விடுகிறார்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/246&oldid=1581179" இலிருந்து மீள்விக்கப்பட்டது