உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

ஐந்தாம் நிகழ்ச்சி : ஏழாங் காட்சி

களம் : காட்டுவழி

காலம் : வைகறை யாமம்

அம்பிகாபதி : (தந்தையை நோக்கி) அப்பா, பாதி மதியாயிருந்தும் அஃதெறிக்கும் நிலவோ மிகவுந் தெளிவான ளியினைத் தருகின்றது. அதுகண்டு என்னுள்ளந் திகில் கொள்கின்றதே!

அமராவதி : (கம்பரை நோக்கி) ஆம் ஐயனே! இந்த நிலவு வெளிச்சத்தில் என் தந்தையின் படைஞர் நம்மைத் தேடிப் பிடிக்க வருவாராயின் நமது சகடத்தின் உருள்கள் பதிந்த சுவடு நாஞ்செல்லும் வழியினை அவர்க்கு காட்டிவிடுமே! என் செய்வது!

கம்பர் : :

றைவனை

உண்மைதான் குழந்தாய்! ஆனாலும் இப் போதே ஒரு பெருமழை பொழியும்படி நம் வேண்டினால், மழை பொழியும்; அதனால் உருட்சுவடு கட்புலன் ஆகாமற் கலைந்துவிடும். நாஞ் சகடத்தினின்றுங் கீழ் இழிந்து எல்லாம் வல்ல ஆண்டவனை வனை வணங்கி வேண்

வோமாக!

(சகடத்தை நிறுத்தி எல்லாரும் அதனின்றும் இறங்கி வான்நோக்கி வழிபடுகின்றனர்.)

கம்பர் : (வழிபட்டபின் பாடுகின்றார்):-

காத லிருவர் கழுமுவது வாய்மையெனில்

ஏதம் அவர்க் கிழைத்தல் இன்னலெனில் - மேதகவாய்ப் போனநீர் தாங்குசடைப் பெம்மாள் றிருவருளால்

வானங்காள் பெய்ம்மின் மழை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/247&oldid=1581180" இலிருந்து மீள்விக்கப்பட்டது