உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

215

இது பாடிய சிறிது நேரத்திலெல்லாம் வானங் கறுத்துக் குமுறி இடியும் மின்னலுந் தோன்றி மழைத்துளிகள் விழித்துவாங்கவே எல்லாரும் மிக வியப்புற்று இறைவனை வாழ்த்தி, மழைக்கு ஒதுங்கி நின்று அங்கேதும் ஒரு குடிசையுங் காணாமையால் விரைந்து சகடமேறிச் செல்லச் சிறிது தொலைவில் ஒரு பாழ் மண்டபங் காணப்படுகின்றது.

அமராவதி : (கம்பரை நோக்கி) ஐயனே! பேருதவி செய்யும் இம்மழைக்கும் அஞ்சி ஓர் ஒதுக்கிடந் தேட வேண்டியிருக் கின்றதே! இக் கானகத்திற்றங்க சிற்றில்லுந்

தென்படவில்லையே!

ஒரு

சகடவலவன் : அம்மணி! கவலைப்படவேண்டாம்! அதோ! சிறிது தொலைவில் ஒரு மண்டபந் தென்படுகின்றது! நிலா வெளிச்சத்தை மழைக்காலிருட்டு முழுவதும் மறைக்கு முன் நாம் அவ்விடம் போய்ச்சேரலாம்.

(எல்லாரும் மகிழ்ந்து அம்மண்டபம் போய்ச்சேர, மழை பொழிகின்றது)

கம்பர் : (வலவனை நோக்கி) அப்பனே! இம்மண்டபம் : பாழடைந்ததொன்றாய்த் தோன்றுகிறது! இருண்டு கிடக் கின்றது! தீப்பந்தம் ஏற்றிப்பார்த்துத்தான் உள்ளே தங்கல் வேண்டும் (வல்லவன் தீப்பந்தம் ஏற்றிக்காட்ட எல்லாருந் துப்புரவாயிருந்த ஒருபகுதியிற் சென்று அமர்கின்றனர்.) இன்னும் பொழுது விடிவதற்கு இரண்டொரு நாழிகைதான் இருக்கு மென்று நினைக்கின்றேன். நம்மரசனின் ஏவலாட்கள் நாம் செல்லும் வழியைத் திட்டமாய்த் தெரிந்து பின்றொடர்தல் விரைவில் இயலாது.

சகடவலவன் : சாமி, குதிரைகள் மிக விரைவாய் வந்திருக் கின்றன! இப்போது நாம் தில்லைமாநகர்க்கு வடக்கேயுள்ள காட்டிற் குறுக்குவழியாய் வந்திருக்கின்றோம். பெரும் பாட்டையில் வந்தால் நம்மன்னரின் ஏவலாட்கள் பின் றொடரக்கூடுமென்று இப்படிச் செய்தேன்.

கம்பர் : நன்று செய்தாய்! பொழுதுவிடியும்முன் நாம் இன்னுந் தொலைவான இடம் போய்விடுவது நலம். ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/248&oldid=1581181" இலிருந்து மீள்விக்கப்பட்டது