உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் 12

மழையோ கடுமையாய்ப் பெய்கின்றது. இன்னுஞ் சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும்; நின்றவுடன் புறப்படலாமா?

வலவன் : சாமி, குதிரைகளை இனி ஒரே நெட்டாய்க் கொண்டுபோதல் ஏலாது; இடையிடையே அவைகளின் அலுப்புத் தீர்த்துத்தான் கொண்டுபோக வேண்டும்.

கம்பர் : அன்பனே! எங்கனமாவது நீ எங்களை வேங்கட மலைப் பக்கங் கொண்டு போய்ச் சேர்த்து விட்டால், அங்கிருந்து வேறு குதிரைகள் மாற்றிக் கொண்டுசெல்ல லாம். அங்கே எனக்கு வேண்டிய உதவி செய்யத்தக்கவர்கள் இருக்கின்றார்கள். நாம் இனிச் செல்வது பகற்பொழுதிலா வழக்கம் மிகுதியாயில்லாத

கயால்

ஆள்

சகடத்தைச் செலுத்தப் பார்!

வழியே

வலவன் : நல்லதப்படியே சாமி! குறுக்கு வழி மழைத் தண்ணீரால் நனைந்து சேறாயிருக்குமானால், குதிரைகள் சகடத்தை விசையாய் இழுத்துச் செல்லமாட்டா. எல்லா வற்றிற்கும் பொழுது விடிந்தபின் புறப்படுவம். அதுவரையிற் சிறிது ஓய்வாக உறங்குங்கள்!

(வலவனைத் தவிர எல்லாரும் அயர்ந்துறங்குகின்றனர்.)

அம்பிகாபதி : (துடிதுடித்து) ஐயோ! அப்பா! ஏதோ ஒரு பெரும்பாம்பு வந்து என் காலைக் கடிக்கின்றதே! ஐயோ! அமராவதி! காவேரி! உங்களை இக்கானகத்தில் விட்டு யான் இறக்க நேர்ந்துவிட்டதே! என் செய்வேன் தெய்வமே!

(வலவன் தீப்பந்தத்துடன் ஓடிவந்து பாம்பை அடித்துக் கொல்கின்றான். காவேரியும் அமராவதியுந் திகில் கொண் டெழுகின்றனர்.)

அமராவதி : (தன் செயலற்றவளாய் எழுந்து கணவனைத் தன் மடிமேற் சார்த்திக் கொண்டு புலம்புகின்றாள்.)

உயிரிற் சிறந்தவென் கேள்வனுயிர் உயல் வேண்டிச்

செயிருற்ற தந்தையெனுங் கூற்றுவனைத் தீர்ந்துவந்தேன்,

துயிலுற்ற நேரத்திற் றுணைவனுயிர் கவர்தற்கிங்

கெயிறுற்ற வெவ்வரவை ஏவியதென் னிறைவனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/249&oldid=1581182" இலிருந்து மீள்விக்கப்பட்டது