உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

பெண்ணென்றாற் பேயு மிரங்குமென்பர் பேருலகில் துண்ணென்று பேயோ டுடனாடு தொழிலோனே!

எண்ணென்று மென்மட்டில் நின்னெஞ்சம் இரங்கிலையால், மண்ணென்று மடிந்திடுவென் அதுகண்டு மகிழ்தியோ!

6

இரக்கமிலி நின்கணவன் எவ்வுயிரும் மடிப்பவன் நீ புரக்கவுயிர் தமையென்றும் பெருகுமருள் பொழிபவளால், துரக்கவல எவ்வினையுந் தோகைநின தின்னருளைக் கரக்க வெமக் கெவ்வாறு நின்னெஞ்சிற் கருதினையோ! (இவ்வாறு அமராவதி புலம்பிச் சோர்ந்து விழக் காவேரி கலங்கி அவளைத் தன் மடிமேற் றாங்குகின்றாள்.)

217

கம்பர் : குழந்தாய் அமராவதி, கலங்காதே! இதோ பார்! கண்ணுதலோன் தண்ணருளால் நின் கணவன் துயின்றெழு பவன் போல் உயிர்பெற்றெழுந்திடுவான்!

அமராவதி : (இச்சொற் கேட்டதும் விழித்தெழுந்து) மாமா, என் கணவன் பிழைத்துக் கொள்வாரா? உயிர் வந்துவிடுமா? (கணவனை உற்று நோக்க)

கம்பர் : (பாடுகின்றார்) :-

"மங்கை யொருபாகன் மார்பிலணி யாரமே

பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே - திங்களையுஞ்

சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே

ஏறிய பண்பே யிறங்கு.

وو

(உடனே அம்பிகாபதி துயின்றெழுந்தவன் போலெழுந்து, தந்தையைப் பணிந்து, அமராவதியை அணைந்து, தன் தங்கை காவேரியின் முகத்தைத் துடைக்கின்றான்)

வலவன் : (கம்பரின் அடிகளில் விழுந்து வணங்கி) புலவர் பெருமானே, தாங்கள் தெய்வம்! தாங்கள் தெய்வம்! எவருடைய துணை யும் உதவியுங் கிட்டாஇக் கடுங்காட்டில் தாங்களன்றோ தெய்வமாயிருந்து எங்களைக் காப்பாற்றினீர்கள்! தாங்களே கண்கண்ட தெய்வம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/250&oldid=1581183" இலிருந்து மீள்விக்கப்பட்டது