உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் 12

கம்பர் : அன்பனே! அங்ஙனஞ் சொல்லாதே! தேவர் களைக் கொல்ல எழுந்த கொடிய நஞ்சைப் பருகி அவர் களைக் காத்த நீலமணி மிடற்றானருளாலன்றோ என் மகன் பிழைத்தான். ஆதலால், நாம் எல்லாம் அவனைப் பாடிப் பரவுவோமாக!

அமிழ்துண்டு சாவாமை வேண்டி அருவரையைச் சிமிழ்கின்ற பாந்தளாற் றிருப்பாற் கடல்கடைந்தோர் உமிழ்நஞ்சாற் றீதெய்த உளமிரங்கி யந்நஞ்சை அமிழ்தென்று பருகியவர் ஆருயிரை அளித்தோய் நீ!

எவ்வுயிர்க்கும் இறப்பினையும் பிறப்பினையும் இசைத்தோய் நீ! அவ்வுயிர்போல் இறத்தலிலும் பிறத்தலிலும் அலைகிலையால்; இவ்வுலகிற் பிறந்தவுயிர் இறைவநினை யுறுங்காறும் ஒவ்வுமா புரப்போனும் உமைகேள்வ நீயன்றோ!

அடித்திடினும் ஒருகையால் அணைத்திடுதி மறுகையால் இடித்துரைக்குந் தந்தையுளத் தேதேனுந் தீதுண்டோ? மடித்திடுதற் கெண்ணியஎம் மன்னனையும் பிழைப்பித்து நடித்துயிரைக் காப்பவன்நீ நங்களையுங் காத்தனையே!

(இதற்குட் பொழுது விடியச் சகடமேறிப் புறப்பட்டு, இடை யிடையே தங்கிப் பத்தாம் நாள் வேங்கடமலைப் பக்கமாயுள்ள காட்டுவழியே செல்கின்றனர். பகலவன் மேல்பால் மறையும் வேளையிற் கள்வர் கூட்டமொன்று வந்து வ இவர்களை

வளைத்துக் கொள்கின்றது.)

வந்த கள்வரிற் றலைவன் : அடே பயல்களா! இந்தச் சகடம் ஓட்டியையும் இந்தக் கிழவனையும் மரத்தோடு சேர்த்துக் கட்டிவையுங்கள்! இந்தக் குமரிகள் இரண்டு பேரும் நிரம்ப அழகாயிருக்கின்றார்கள்! இவர்களை நம் கொற்ற வனிடங் கொண்டுபோய்ச் சேர்ந்தால் அவன் நம்மை மெச்சிக்

காண்டு இவர்களை வைப்பாட்டிமாராக வைத்துக் கொள்வான். (அம்பிகாபதியைச் சுட்டி) இந்த இளம்பயல் பழுதில்லா அழகுள்ளவனாய் இருக்கிறான். வனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/251&oldid=1581184" இலிருந்து மீள்விக்கப்பட்டது