உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

219

கையுங்காலுங் கட்டிக் கொண்டுவாருங்கள்! நம்ம காளியம்மன் திருவிழாப் பூசைக்கு இவனை வெட்டிப் பலி யூட்டலாம்!

அமராவதியுங் காவேரியும் (இச்சொற்களைக் கேட்டுத் திகில் கொண்டு நடுங்கி)- ஐயா! எங்களுக்கொன்றுந் தீங்கு செய்யாதீர்கள்! எங்கள் கையிலுள்ள பொருள்களை எல்லாம் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்! எங்களை வழிபோகவிட்டுவிடுங்கள்!

கள்வர் தலைவன் : ஏ! சிறுக்கிகளா! உங்கள் பொருளை மட்டும் அல்ல, உங்களையும் எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும்.

இவன் குறிகாட்டி ஏவ, அவன் ஆட்கள் ஆண்பாலார் மூவரையும் பிடித்துக்கட்ட அணுகுகின்றனர்.)

கம்பர் : (இறைவனை நினைந்து)

நின்னால் வருந்துணையை யல்லாமல் நின்னின்வே றென்னாவி என்றுமே எண்ணவிலை - பொன்னான வெள்ளச் சடையாய் வெருட்டி முருக்கவருங்

கள்ளரைக் காலற்கே காட்டு.

(இச் செய்யுளைப் பாடிய அளவிலே தலைவனைத் தவிர நெருங்கி வந்த கள்வரனைவரும் உணர்வற்றுக் கீழே விழுந் துவிடுகின்றனர். அதுகண்ட தலைவன் நடுநடுங்கிக் கம்பர் காலில் வீழ்ந்து வணங்குகின்றான்.)

கள்வர் தலைவன் : ஆண்டவனே! தாங்கள் தமிழறிவிற் சிறந்த பெரியாரென்பதைத் தெரியாமற் பெரும் பிழை செய்துவிட்டேன். இதனை எங்களரசன் அறிந்தால் துண்டு துண்டாக வெட்டிப்போடுவான்.

கம்பர் : (வியந்து) அப்பா! நுங்கள் அரசனது ஏவ லாற்றானே நீங்கள் இங்ஙனம் வழிப்பறி செய்ய வந்தீர்கள்?

கள்வர் தலைவன் : ஆம், ஆண்டவனே! ஆனாலுந் தமிழுணர்ந்தவர்களுக்கு ஏதொரு தீங்கும் புரியாமல், அவர்களுக்கு வேண்டும் உதவிகளைச் செய்து அவர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/252&oldid=1581185" இலிருந்து மீள்விக்கப்பட்டது