உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் 12

பணிந்து வழிவிடுக்கவேண்டுமென்பது எங்கள் மன்னனின் கடுமையான கட்டளை!

கம்பர் : அவ்வாறாயின், நுங்கள் மன்னன் பழைய கள்வர் கோமான் புல்லியின் கால்வழியில் வந்தவனா?

உணர்ச்சி

கள்வர் தலைவன் : ஆம், ஐயனே! எங்கள் மன்னன் தமிழ் உடையவர். எங்கள் ஊரில் தமிழ்ப் பயிற்சியில்லாதவர்கள் எவருமேயில்லை. மேலும் எம் மன்னன் தமிழ்ப் புலவர் கேட்டவைகளைக் கேட்டபடியே நன் காடையாக அளிப்பவர். அவரை இதோ சிறிது நேரத்தில் இங்கழைத்து வருகின்றேன்.

(விரைந்து போய் விடுகின்றான்.)

கம்பர் : அம்பிகாபதி பார்த்தனையா? கள்வர்களின் மன்னன் தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள் பால் வைத்திருக்கும் அன்பும் பணிவும் உதவியும் நந்தமிழ் நாட்டரசர்கள்பாலும் இல்லையே!

அம்பிகாபதி : ஆம், அப்பா, நம்மரசர்கள் தமக்கு மேற்பட்டவர்களில்லை யென்னும் இறுமாப்பில் அமிழ்ந்தித், தாங்கருதியதைத் தாங்கருதியாங்கே முடிக்குங் கட ப்பாடு உடையராயிருக்கின்றனர்; அதனால், அவர்கட்குத் தமிழ்ப் புலவர்பால் அன்பும் இரக்கமும் எங்ஙனம் உண்டாகும்? நல்லதப்பா, கள்வர் மன்னன் வந்து தம்மவர் இத்தனை பேரும் இறந்து கிடப்பதைக் கண்டால் என் ஆகுவானோ! என் செய்வனோ!

கம்பர் : இவர்கள் உயிரிழந்து சாகவில்லை; உணர்வும் யிர்ப்பும் அற்ற ஆழ்ந்த துயிலில் இருக்கின்றார்கள்.

அம்பிகாபதி : அங்ஙனமாயின், இவர்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்யலாமா?

கம்பர் : செய்யலாம்; ஆனால், இன்னும் இரண்டரை நாழிகைக்குமேல் இதே துயிலில் தே துயிலில் இருப்பார்களானால், இவர்களனைவரும் இறந்துபோய் விடுவார்கள்! (கள்வர் தலைவனுடன் கள்வர் கோமான் வருகின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/253&oldid=1581186" இலிருந்து மீள்விக்கப்பட்டது