உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

221

இருவரும் (கம்பர் காலில் விழுந்து வணங்கி) - புலவர் பெருமானுக்கு அறிவிலேம் செய்த பெரும் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். அப்பிழைக்காக எம்மவர் இத்தனைபேருந் தங்கள் வசைக்கு ஆளாகி இறந்தொழிந்தது பொருத்தந்தான்; இவர்கள் செய்த பிழைக்குப் பொறுப் பாளிகள் யாங்களேயாதலால், யாங்களும் இறந்தொழியும் படி வசைபாடி விடுங்கள் பெருமானே!

கம்பர் : (மனமிரங்கி) கோவே, வருந்தாதே! இறைவ னருளால் இவர்கள் வர்கள் மீண்டும் உயிர்பெற்றெழுவார்கள் (பாடுகிறார்) :

மீண்டும்

நின்னால் வருந்துணையை யல்லாமல் நின்னின்வே றென்னாவி என்றுமே எண்ணவிலை - பொன்னான வெள்ளச் சடையாய் வெருண்டு திருந்தியவிக்

கள்ளரைக் காவலற்கே காட்டு.

இவ்வாறு

பாடியவளவிலே நிலத்தே வீழ்ந்துகிடந்த கள்வ

ரனைவரும் உயிர்த்தெழக்

கள்வர்கோமான்

மீண்டுங்

கம்பரடிகளில் வீழ்ந்து)

கள்வர் கோமான் : ஐயனே! யாங்கள் எல்லேமுந்தங் கட்குந் தங்கள் கால்வழியே வருவார் அனைவர்க்கும் வழி வழி அடிமை, ஆண்டவனே! அடியேங்கட்கு யாது கட்டளை? (உயிர்த்தெழுந்த அனைவரையுங் கம்பர் காலில் வீழ்ந்து வணங்கச் செய்கின்றான்.)

கம்பர் : (வணங்கியெழுந்தாரொடு நின்ற கள்வர் கோமானை நோக்கி) அப்பனே! ஆறலைக்கும் இக்கொடுந் தொழிலை நீயும் நின் வழியில் வருவாரனைவரும் அறவே விட்டொழித்தல் வேண்டும்.

கள்வர் கோமான் : எல்லாம் வல்ல ஆண்டவனறிய இத்தீத் தொழிலை யாங்கள் இனிக் கனவிலும் நினையோம். ஏழையெளியவர்கள் தேடிய சிறுபொருளைப் பல்வகைச் சூழ்ச்சிகளாற் கவருஞ் செல்வர்களின் பெரும் பொருளையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/254&oldid=1581187" இலிருந்து மீள்விக்கப்பட்டது