உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

❖ LDM MLDMOED -12 →

வறியார்க் கிரங்கி ஈயாதவர் செல்வத்தையும், அறத்திற்குங் கற்றார்க்கும் நல்காதவர் பொருட்டிரளையுங் கவர்ந்து மிடிப்பட்டார்க்குங் குறையுடையார்க்கும் அவற்றைப் பயன் படுத்தவே இத்தீச் செயலை இதுகாறுஞ் செய்து வந்தோம், பெருமானே!

கம்பர் : கோமானே! இரக்கமும் அறநெஞ்சமும் இல்லாத் தீயசெல்வரின் பொருளைக் கவர்தற்கு "இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும்” இருக்கையில், தமிழன்பர் களாகிய நீங்கள் ஏன் இப்பழிக்கும் பாவத்திற்கும் ஆளாக வேண்டும்? " அழக் கொண்ட எல்லாம் அழப்போம்' ஆதலால் அதன் பொருட்டு இத்தீவினையை இனி எக்காலும், எக்காரணத்தாலும் நீங்கள் மேற்கொள்ளலாகாது.

66

கள்வர் கோமான் : தங்கள் கட்டளைப்படியே இனித் தவறாமல் நடப்போம். புலவர் பெருந்தகையே, எல்லீரும் அடியேன் சிறு குடிலுக்கு எழுந்தருளி உணவருந்தி வழி வந்த அயர்வினைத் தீர்த்துக் கொள்ள வேண்டுகின்றேன்.

(எல்லாரும் அவனது இல்லத்திற்குச் செல்ல, அவன் அவர்கட்கு வேண்டுவனவெல்லாஞ் செய்து அகமும் முகமும் மலர்ந்து விருந்தோம்ப அங்கே மூன்று நாட்கள் தங்கிய பின்)

கம்பர் : அன்பனே! நீ எம்மை அன்புடன் விருந் தோம்பிய திறத்தை என்றும் மறவேம். இனி. யாங்கள் குறித்த இடத்திற்குச் செல்ல விடை கொடு.

கள்வர் கோமான் புலவர் பெருமானே! தாங்கள் செல்ல வேண்டும் இடம் இன்னதென்பதை அறிந்திலேன். அது வல்லாமலும, புலவர் பெருமானைப் பற்றி வரலாறும் பெரு மானுடன் வந்திருப்பவர் வரலாறுஞ் சிறிதுந் தெரியப் பெற்றிலேன். இவற்றை யான் தெரிவதிற் குற்றமில்லை

யானால்

L

கம்பர் : குற்றம் ஏதுமில் அப்பனே. என் பெயர் ஏகம்பன்; சொற் சுருக்கத்தாற் ‘கம்பன்' என்று வழங்கப்படுகின்றேன். (தம்மவரைச் சுட்டி) இவன் என் மகன் அம்பிகாபதி; இம் மங்கை அம்பிகாபதியின் மனைவி; இவள் என் புதல்வி காவேரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/255&oldid=1581188" இலிருந்து மீள்விக்கப்பட்டது