உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

223

யாங்கள் சோழ மன்னன் அவைக்களத்திற் புலவர் களாயிருந்தோம். ஒரு காரணத்தை முன்னிட்டு ஓரங்கல் வேந்தன் பிரதாபருத்திரனிடஞ் செல்கின்றோம். சிறிது காலம் வரையில் எங்களைப் பற்றிய சய்தி எவர்க்குமே தெரியலாகாது.

-

என்

கள்வர் கோமான் : (கைகூப்பி வணங்கியழுது) தெய்வமே! யான் முற்பிறவியில் ஆற்றிய தவமன்றோ தங்களுருவாய் என் கண்ணெதிரே தோன்றலாயிற்று. தங்கள் அருமைத் திருப்பெயரையுந் தங்களருமைப் புதல்வரின் திருப்பெயரையும் நீண்ட நாளாய்க் நாளாய்க் கேள்வியுற்றுத் தங்களைக் கண்டு களிக்கும்பேறு வாய்க்குமா என்று ஏங்கிக் கிடந்த ஏழையேனுக்கு எதிர்பாராது கிடைத்த இத் தெய்வக் காட்சியை யான் காண்பது கனவா! நனவா! (என்று சொல்லி திகைத்து நிற்கக்)

கம்பர் : (அவனது பேரன்பினை வியந்து) அப்பனே! உனது பேரன்பே எமது புல்லியமக்களுருவினை இவ்வளவு உயர்த்துப் பேசச் செய்தது. “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” எப்போதும் யாங்கள் நின் அன்பை வியந்து நின்னை நினைந்த படியாய் இருப்போம். நல்லது யாங்கள் செல்ல விடை கொடு!

கள்வர் கோமான் : தங்கள் பிரிவினை ஆற்றகில் லேன் தங்களை மீண்டுங் காணும்பேறு கிட்டுமோ? (கண் கலங்குகின்றான்)

கம்பர் : அன்பனே! வருந்தற்க! இப்போது நம்மை ஒருங்குகூட்டிய தெய்வம் மீண்டும் நம்மை ஒன்று கூட்டலாமன்றோ?

கள்வர் கோமான் : ஆம் ஐயனே! தாங்கள் பூட்டிவந்த குதிரைகள் நெடுவழி வந்தமையால் மிகக் களைத்துப்போய் விட்டன. ன. என்னுடைய குதிரைகளைப் பூட்டிச் செல்லுங்கள்! இன்னுஞ் செல்லவேண்டிய வழி நெடிதாக இருத்தலால் என்னுடைய குதிரைகள் இளையாமல் மிக ளையாமல் மிக விரைவில் வண்டியை ஈர்த்துச் செல்லும். இன்னும் அடியேன் செய்ய வேண்டும் பணியைக் கட்டளையிடுங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/256&oldid=1581189" இலிருந்து மீள்விக்கப்பட்டது