உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

233

அச்சமின்றி வரலா மென்றும் ஒட்டக்கூத்தர் என் தந்தை யார்க்கு வரைந்திருக்கின்றார்.

(இச் செய்திகேட்டு அமராவதி வெருக்கொண்டுங் காவேரி கண் கலங்குதல் கண்டு ஏதுங் கூறமாட்டாமல் மயங்கியிருக்கின்றாள். அம்பிகாபதி தன் தங்கையை நோக்கி)

அருமைக் குழந்தாய்! என் நண்பன் இடர் உறயான் உயிரோடு இரேன்! என் உயிரை இழந்தாவது அவனைச் சிறையினின்றும் விடுவிப்பேன்?

காவேரி : அண்ணா, அண்ணா, யான் எதற்கென்று வருந்துவேன்! இருதலைக் கொள்ளியிட ருதலைக் கொள்ளியிடைப்பட்ட எறும் பாயினேனே! (தேம்பித் தேம்பி அழுகின்றாள்; அமராவதி அவள் கண்களைத் துடைத்து அமர்த்துகின்றாள்.)

பிரதாபன் : அருமைக் குழந்தைகாள்! நீங்கள் எதற்குமே மனங்கலங்க வேண்டாம். உங்களில் எவர்பாலுங் குற்ற மில்லை. ஆதலால், எல்லாம்வல்ல இறைவன் உங்களைப் பாதுகாப்பான். ஊழ்வினையால் ஏதேனுந் தீங்கு நேரின், என் உயிரை இழந்தாயினும் அதனைத் தீர்ப்பேன்! (எல்லாரும் வேந்தனைப்பணிந்து வாழ்த்துகின்றனர்) நீங்கள் அனை வீரும் தஞ்சைமா நகருக்குப் புறப்பட வேண்டும் ஏற்பாடு களை விரைந்து செய்யுமாறு அமைச்சரை ஏவுகின்றேன். இதற்குள் ஒரு தூதுவன் போந்து மன்னனை வணங்கி ஒரு திருமுகத்தை நீட்ட, மன்னன் அதனைப் பிரித்துப் பார்த்து) ஓ! ஃதென்ன ஆருயிர் நண்பன் கூர்ச்சர மன்னனிடமிருந்து வந்திருக்கின்றது! மகமது கோரி என்னுந் துலுக்கர் மன்னன் கூர்ச்சர நாட்டினைக் கைப்பற்றுதற்குப் படையெடுத்து வருகின்றனனென்றும், அவனை யெதிர்த்து நின்று ஓ டு தற்கு வேண்டும் உதவிகளைச் செய்ய உடனே யான் புறப் பட்டு வரல்வேண்டுமென்றும், அவன் துரத்தப்படாவிடிற் சிவபிரான் திருக்கோயில்களை அழித்துச் சைவ சமயத் திற்கும் நம் நாட்டு மக்களுக்குமே அவன் பெருந்தீங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/266&oldid=1581199" இலிருந்து மீள்விக்கப்பட்டது