உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் -12

புரிவனென்றும் நடுங்கத்தக்க செய்தி இதன்கண் வரையப் பட்டிருக்கின்றதே.

இது கேட்டு எல்லாருந் திகில் கொள்கின்றனர்.)

கம்பர் : மன்னர் பிரானே! தங்களையொத்த பெரு வேந்தர் முனைந்தால் மிலேச்ச அரசரும் பிறரும் நமது நாட்டினுள்ளே தலைக்காட்டல் இயலுமோ? ஆதலால், தாங்கள் உடனே சென்று கூர்ச்சர மன்னனுக்குத் துணையாய் நின்று, நமது நாட்டிற்கு வருவதாய்க் காணப்படும் பேரிடரை நீக்கியருளல் வேண்டும்.

அமராவதி : (அரசனை நோக்கி வணங்கி) அங்ஙன மானால், அப்பா, தாங்கள் எங்களுடன் போந்து எங்களுக் குதவி செய்தல் இயலாது போலிருக்கின்றதே! தங்கள் துணை யின்றி என் தந்தைபாற் செல்ல என்நெஞ்சம் நடுங்குகின்றதே! (அழுகின்றாள்.)

பிரதாபன் : குழந்தாய்! அழல் வேண்டாம். நீயும் நின் கணவனும் நின் தந்தைபாற் செல்லவேண்டுவது தான் எதற்க்கு? நுங்கள் திருமணத்தை இங்கேயே செய்வித்து விடுகின்றேன். நீங்களெல்லாம் இங்கே என்னுடனிருந்தே அச்சமின்றி உயிர் வாழலாமன்றோ?

அமராவதி : மன்னர்பிரான் நீடு வாழ்க! தாங்கள் எளியேங்கள் பால் இவ்வளவு இரக்கம் வைத்து எங்களை முற்றும் பாதுகாக்க ஒருப்பட்ட பேரருட்டிறத்திற்கு ஏழை யேம் எங்ஙனம் கைமாறு செலுத்த வல்லேம்! பெருமான் திருவுளத்திற்கு மாறாக ஏதும் பேசுகில்லேன் -

பிரதாபன் : அருமைத் தோன்றால்! நீங்கள் கருதுவதை அஞ்சாமல் திறந்து சொல்லலாம். அதுபற்றிச் சிறிதும் வருந்தேன்.

அம்பிகாபதி: அமராவதியும் யானுந் திரும்பித் தம்மிடம் வந்தாலன்றி, என்னாருயிர் நண்பர் நயினார் பிள்ளை சிறையினின்றும் விடப்படானென்று சோழ மன்னர் உறுதி செய்திருப்பதாக எனக்கு வந்த ஓலை தெரிவிக்கின்றது. மேலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/267&oldid=1581200" இலிருந்து மீள்விக்கப்பட்டது