உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

235

என்னருமைத் தங்கை காவேரிக்கு நயினார் பிள்ளையே மணமகன்! பெருமான்! யாங்கள் என் செய்வேம்!

பிரதாபன் : ஆ! தம் ஆருயிர் நண்பனைக் காக்கத் தன்னுயிரையும் பொருட்படுத்தாத அம்பிகாபதியாரின் அன்பும் வாய்மையும் எவ்வளவு வியக்கத்தக்கன! அவரது நல்லெண்ணத் திற்கு யான் ஏதுந் தடை சொல்கில்லேன் - நீங்களெல்லாம் நாளையே நம் நண்பர் குலோத்துங்க சோழ மன்னர்பாற் செல்ல ஒழுங்கு செய்கின்றேன். யானும் நாளையே கூர்ச்சர மன்னர்பாற் சென்று ஆவன விரைந்து செய்து, என் படைஞருடன் ஒரு கிழமையிற் காற்றினுங் கடுகித் தஞ்சைக்குப் போந்து உங்களைக் காண்பேன். விரும்பினால் யான் வருவதற்குள் அம்பிகாபதியார்

அமராவதி திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைக்கலா மென்றும் வற்புறுத்தி அரசற்கு ஒரு திருமுகமும் விடுக்கின்றேன்.

அம்பிகாபதி : (அரசனை வணங்கி) மன்னர்பிரான் பேருதவி மன்னுயிர்கட்கு மழை செய்யும் உதவியினும் விழுமிது. மன்னர்பிரானை யாம் மீண்டுங் காணும் வரையில் எம்முயிர் எம்முடலின்கண் நிலைபெறுமோ?

அமராவதி : (தனக்குள்) இச்சொல் நற்சொல் அன்று! எமக்குதவி செய்யும் பொருட்டு எம்முடன் போத இருந்த இம்மன்னர் பிரானையும் ஊழ்வினை தடை செய்துவிட்டது! என் காதலர் தம் நண்பர்பாலும் தம் தங்கையின் நலத்திலும் கொண்டுள்ள நல்லெண்ணம் பெரிதும் பாராட்டற்பாலது! அவரோடுடனிருந்து மாய்வதே எனக்கு வாய்வது!

(எல்ாரும் அரசனை வணங்க அரசன் போய் விடுகின்றான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/268&oldid=1581201" இலிருந்து மீள்விக்கப்பட்டது