உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

ஐந்தாம் நிகழ்ச்சி : பதினோராங் காட்சி

களம் : தஞ்சையிற் சோழன் அரண்மனை

காலம் : காலை நேரம்

சோழன் : (சினத்தை அடக்கி மகிழ்ச்சிக் குறிகாட்டி) புலவர் பெருமான் கம்பர் வரல் வேண்டும்! புலவர்மணி அம்பிகாபதி வரல்வேண்டும்! நீங்கள் இருவீரும் இல்லாத நமது அவைக்களம் பகலவனும் முழுமதியும் இல்லாத வானையே நிகர்த்திருந்தது. அம்பிகாபதி, நீயும் அமராவதியும் பூண்ட காதலன்பின் றிறத்தை யறியாமல் நுங்கட்குப் பிழைசெய்து விட்டேன். நம் நண்பர் பிரதாபருத்திர வேந்தன் ஒரு கிழமையில் இங்கு வருவதாகவும், அதற்கிடையில் யாம் விரும்பினால் நுங்கள் திருமணத்தை முடித்து விடலாமென்றும் எமக்கு வரைந் திருக்கின்றார். ஆதலால், அதனை விரைந்து முடித்தற்கு வேண்டுவது சூழ தமது அத்தாணி மண்டபத்திற்குச் செல்வோம் வாருங்கள்!

கம்பரும் அம்பிகாபதியும் : மன்னர்பிரான் கட்டளைப்

படியே

(எல்லாரும் போகின்றனர்.)

(அரசி அங்கயற்கண்ணியின் மாளிகையில்)

அரசி : (அமராவதியையும் காவேரியையுங் கட்டித் தழுவி) கண்மணி அமராவதி, நீ மீண்டு வந்ததில் என்னுயிரையே யான் திரும்பப் பெற்றவளாயினேன். ஆனாலும், நின் கணவன் உயிர் பிழைக்க வேண்டுமே யென்பதை நினைக்க என்னுள்ளம் ஆறாத்துயரத்திற்கு ஆளாகின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/269&oldid=1581202" இலிருந்து மீள்விக்கப்பட்டது