உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

(நடுங்கி) ஏனம்மா அப்படிச்

காவேரி : (நடுங்கி)

237

சொல்லு

கிறீர்கள்? நம் மன்னர் பிரான் நம் அருமைப் பெருமாட்டி அமராவதியை என் தமையனார்க்கு மணஞ்செய்து விடுவ தாகவே பிரதாபருத்திர வேந்தற்குத் திருமுகம் விடுத்தனரே! அரசி : கண்மணி! நம் அரசர் சீற்றஞ் சிறிதுந் தணிந்திலர்! அதனால், அவர் வரைந்த அச்சொல்லில் எனக்கு நம்பிக்கையில்லை, நீங்களெல்லாம் இங்கே திரும்பி வந்ததில் எனக்குச் சிறிதுமே மனவமைதியில்லை!

அமராவதி : அம்மா, என் செய்யலாம்? அம்பிகாபதியின் ஆருயிர் நண்பர் நயினார் பிள்ளை எங்கட்குதவி செய்தது பெருங்குற்றமாகக் கருதப்பட்டுச் சிறையிடப்பட்டிருக் கின்றனராம். நாங்கள் திரும்பி வந்தாலன்றி அவர் சிறையி னின்றும் விடப்படாரென்றுங் கூத்தர் எழுதியிருந்தார். மேலும், நம் கண்மணி காவேரிக்கு நயினார் பிள்ளையே மணமகன். ஆகவே, இச்செய்தி தெரிந்ததும் அம்பிகாபதி நெஞ்சந்துடித்து, 'நாமெல்லாந் தஞ்சைக்குடனே புறப்படல் வேண்டும்!' என்று உறுதி சொல்லிவிட்டார். அதனை யாருந் தடுத்துச் செல்வதற்குத் துணியவில்லை!

(காவேரியை நோக்கின்றாள்)

காவேரி : நாணத்தாலும் மனத்துயரத்தாலும் முகங் கவிழ்ந்தும்) ஆம், தாயே யான் ஒரு தீவினையாட்டி, நுங்கள் குடிக்கும் எங்கள் குடிக்குந் தீங்காய்ப் பிறந்தேன்!

(அமராவதியின் தோழி நீலம் வருகின்றாள்)

நீலம் : அரசியார் திருவடிகளுக்கு வணக்கம்! நல்ல செய்தி கொண்டுவந்திருக்கின்றேன். நம் இளவரசியாரை அம்பிகாபதியார்க்குத் திருமணஞ்செய்ய நம் மன்னர் பிரான் இப்போதுதான் அரசவையில் முடிவு செய்திருப்பதாகச் சிறையினின்றும் விடுதலை செய்யப்பட்ட நயினார் பிள்ளை நம் அமைச்சர் மகன், எனக்குத் தெரிவித்து விட்டுச் சென் றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/270&oldid=1581203" இலிருந்து மீள்விக்கப்பட்டது