உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

❖ LDMMLDMOLD-12 →

(அதுகேட்டு மூவருந் திடுக்கிட்டு மகிழ்ச்சிக் குறி காட்டுகின்றனர்.)

அரசி : நீலம், எப்பொழுது திருமணம்? எங்ஙனம் முடிவு செய்திருக்கின்றனர்?

நீலம் : அம்மா, நாளைமுற்பகல், அரசவையில் அம்பிகாபதியார் சிற்றின்பப் பொருள் சிறிதும் விரவாமல் பேரின்பப் பொருளே முழுதும் விளங்க நூறு செந்தமிழ்ப் பாப்பாடல் வேண்டுமாம்; அங்ஙனம் அவர்பாடி முடித்த பின் திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடு செய்யப்படுமாம்.

அரசி : (கவலையுடன்) நல்லது! அங்ஙனம் பாடும் நூறு பாக்களில் எங்காயினுந்தப்பித் தவறித் சிற்றின்பப் பொருள் கலந்து விட்டால்?

நீலம் : அதைப்பற்றி

என்ன முடிவு

செய்தார்க

என்பது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அமராவதி : அம்மா, அதனை நாமே சென்றிருந்து நேரே

கண்டு தெரிவோமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/271&oldid=1581204" இலிருந்து மீள்விக்கப்பட்டது