உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

❖ LDMMLDMOLD-12 →

அம்பிகாபதியின் பாட்டு

கூறினமையின், இப்போது இ அரசவையில் நடந்து கொண்டிருக்கின்றது! நின் தந்தையார்

கவலையுள்ளத்துடன் அரசவையின் முடிவினை எதிர்

6

பார்த்துக் கொண்டிருக்கின்றார். யான் அங்கிருக்க மனமின்றி, உனக்கதனைத் தெரிவித்துப் போகவே இங்கு வந்தேன்.

காவேரி : (மனம் மருண்டு) என் அன்பே, தாங்கள் தெரிவித்த இது நன்றாய் முடியுமோ? வேறாய் முடியுமோ தெரிவியுங்கள்! என் நெஞ்சம் ஒரு நிலைப்படாது குழம்பு கின்றது!

நயினார் : (திகைபுற்று) யான் ஏது சொல்வேன் கண் மணி? எனக்கொன்றுமே தோன்றவில்லை. (வாயில் முகமாய்த் திரும்பி) யாரோ மிகு விரைவாய் உள்ளே வருவதாய் அறி கின்றேன்.

(சோழன் மகன் திடுமென இருவர்க்கும் எதிரே வந்து நின்று)

அரசிளைஞன் : ஏ! நயினார்! இங்கே என்ன செய்கின் றாய்? சிறையினின்றும் நீ விடுவிக்கப்பட்டதனைக் காவேரிக்கு அறிவிக்கவந்தனயோ?

நயினார் : ஆம் ஐயா! நல்லது, நீங்கள் இங்கு வந்தது எதற்காகவோ?

அரசிளைஞன் : நானும் அம்பிகாபதியைப் பற்றிய செய்தியைக் காவேரிக்கு அறிவிக்கவே இங்கு வந்தேன்.

காவேரி : (துடித்து) அண்ணால், என் தமையனைப் பற்றிய செய்தியை விரைந்து அறிவியுங்கள்! என் உள்ளங் கலங்குகின்றது.

அரசிளைஞன் : கலங்காதே! நின் தமையனுக்கு என் தங்கையை மணஞ்செய்விக்கவே என் தந்தையார் அரசவை யில் அமைச்சர்களுடன் கலந்து பேசிக்கொண்டிருக்கின்றார். (நயினாரை நோக்கி) நோக்கி) ஆசிரியர் கம்பரிடம் நான்பேச வேண்டுவதொன்றிற்காக அவர் வரும்வரையில் நான் இங்கே காத்திருக்க வேண்டும். நீ நின் இல்லத்திற்கு ஏகலாம். (நயினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/273&oldid=1581206" இலிருந்து மீள்விக்கப்பட்டது