உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

241

காவேரிக்குக் கண்ணாற் குறி செய்து போய்விடுகின்றான்.) (காவேரியை நோக்கி) கண்மணி காவேரி, நின் தமையனுக்கு என் தங்கையை மணஞ்செய்விக்க ஏற்பாடாகின்றது. ஆதலால், நீ என்னை மணப்பது நன்றாகக் கருதப்படவேண்டுமன்றோ?

காவேரி : (மருண்டு) அண்ணால், மணத்தைப் பற்றி என்னிடம் ஒன்றுமே பேசல் வேண்டாம்.

அரசிளைஞன் : (சினந்து) அரசன் மகனாகிய நான் உன்னை மணந்துகொள்ள விரும்பும்போது, எங்களை அண்டிப் பிழைக்கும் ஓர் ஒச்சன் மகளாகிய நீ எனக்கு மாறாய் வீண்வீம்பு செய்தால் அஃது என்பாற் செல்லாது. 'ஏ', உன்னை நான் வலிந்து பற்றி மருவினால், யார் என்னைத் தடை செய்ய வல்லார்? இதோ பார்!

(என்று சொல்லி அவளது கூந்தலைப் பிடித்திழுக்க முந்துகின்றான்.)

காவேரி : (சீற்றங் கொண்டு) அ டே! என்னைத் தொடாதே எட்டி நில்! நீ அரசன் மகனாயிருந்தால் என், ஆயிரங் கண்ணன் மகனாயிருந்த;ாலென்! முறை தவறி ஓர் ஏழைப் பெண்ணை வலிமை செய்ய வந்த உன்னை என் கால் தூசிதானும் பொருட்படுத்தாது! (தன் தோழியை விளித்து) அடீபச்சே! இவனை வெளியே தள்ளிக் கதவைத் தாழ் இடு!

(பச்சை ஓடி வந்து அரசிளைஞனைப் பிடிக்க முந்த, அவன் அவளைக் கீழே உதைத்துத் தள்ளிவிட்டு காவேரியைப் பிடிக்க விரைய, அவள் அவன் கையில் அகப்படாமல் தம் வீட்டின் பின்புறத்துள்ள தோட்டத்துள்ளே ஓட, அவனும் அவளைப் பின் றொடர்கின்றான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/274&oldid=1581207" இலிருந்து மீள்விக்கப்பட்டது