உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

ஐந்தாம் நிகழ்ச்சி : பதின்மூன்றாங் காட்சி

களம் : சோழன் அரசியல் மண்டபம்

காலம் : முற்பகல்

(அம்பிகாபதி அரசவையில் அரசன் கட்டளைப்படியே சிற்றின்பப் பொருள் விரவாமல் தொண்ணூற்றொன்பது பாட்டுப்பாடி, நூறாவது பாட்டுப்பாட முனைகையில், மேன்மாளிகையின் கணிருந்து அவற்றைக் கேட்டு எண்ணிக் கொண்டிருந்த அமராவதி காப்புச் செய்யுளையுஞ் சேர்த்துப் பாட்டு நூறாக எண்ணி மகிழ்மீக் கூர்ந்தும், அம்பிகாபதியைச் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க, அம்பிகாபதியும் அவளைப் பார்த்துத் தன்னை மறந்தவனாய்ப் பாடுகின்றான்:-

“சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடந்

துற்றே யசையக் குழையூச லாடத் துவர்கொள் செவ்வாய் நற்றே னொழுக நடனசிங்கார நடையழகின்

பொற்றே ரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே."

சோழன் மன்னன் : (உடனே சீற்றங் கொண்டவனாய்) அடே அம்பிகாபதி, நீ உன் தலையை இழந்தாய்! (அவையிலிருந்தவர் எல்லாரும் நடுங்கி வாய் பேசாதிருக்க அவர்களை நோக்கி) நோக்கி) அவையிலுள்ள ஆ ன்றோர்களே! அமைச்சர்களே! சிற்றின்பப் பொருள் கலவாமல் நூறு பாட்டுப் பாட ஒப்புக் கொண்ட அம்பிகாபதி அதனை மறந்து இறுதிப்பாட்டை எவ்வளவு அடாத நெஞ்சழுத்தத்தோடு சிற்றின்பப் பொருளில் முடித்தான்! ஆதலால், அவனை அரசியன் முறைப்படி நான் ஒறுப்பதில் நுங்கள் கருத்தென்னை?

(முதல் அமைச்சர் நம்பிப்பிள்ளையை நோக்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/275&oldid=1581208" இலிருந்து மீள்விக்கப்பட்டது