உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

243

நம்பிப்பிள்ளை : மன்னர்பிரான்! சீற்றந் தணிந்தருள்க! அம்பிகாபதியார் உள்ளமும் ளவரசியாருள்ளமும் ஒன்றுபட்ட உயர்ந்த காதல் நிலையில், அம்பிகாபதியார் இறுதியில் தம்மை மறந்து வேறுபொருள் விரவப்பாடி விட்டதை ஒரு பெருங் குற்றமாகக் கருதி அவரை ஒறுப்பது அரசியன் முறைக்கு ஒத்ததாயில்லை. அல்லதவரை ஒறுப்பின் இளவரசியார் அதனை ஆற்றாது மடிவர்; அது நமது அரசுக்குங் குலத்திற்குந் தீராப்பழியாம்!

படைத்தலைமையமைச்சர் : வேந்தர் பெருமான்! யானும் அங்ஙனமே கருதுகின்றேன். சொன்ன சொற்றவறினமைக்கு அம்பிகாபதியாரை ஒறுக்க வேண்டுவது கட்டாயமாயின், ருவரையுந் திருமணம் புணர்த்துங் காலத்தைச் சிறிது தாழ்த்து வைக்கலாம். இதற்கு மேற் செயத்தக்கது பிறிது ஏதும் எனக்குத் தோன்றவில்லை.

ஒட்டக்கூத்தர்

(அரசன் குறிப்பறிந்து) பெரியோர் களே பாட்டுத் தவறியது ஒரு மாபெருங் குற்றமாகாவிடினும், அரசின் காவலை மீறி இளவரசியின் உவளகத்தில் ஓராண் மகன் நள்ளிரவிற் புகுந்ததனையே பொறுத்தற்கரிய பெருங் குற்றமாக வேந்தன் நினைக்கின்றார். அக்குற்றத்தை உள்ளிட்டே, அம்பிகாபதியின் பாட்டியற் புலமை யாவது இவ்வவைக்கண் உள்ள புலம்வல்ல நுங்கட்கு விளங்கக் காட்டி அதனால் அக்குற்றத்திற்கு அரசன் கழுவாய் காண முனைந்தார். அக்கழுவாய்க்குந் தடைநேர்ந்தது ஊழ்வினைப் பயனே போலும்!

அரச

அரசன் : (மீண்டுஞ் சினந்து) எமதரசின் கடுங் காவலையும் பொருட்படுத்தாது நள்ளிரவில் மகளிர்க்குரிய கன்னிமாடத்திற் புகுந்து தகாத செய்த அம்பிகாபதிக்கும் அறத்தீய கள்வனுக்கும் யான் வேறுபாடு காண்கிலேன். இவனைக் கையுங் களவுமாய்க் கண்டுபிடித்த அன்றிரவே இவனை என் கத்திக்கு இரையாக்கியிருப்பேன்! ஆனால், அரசவையில் ஆன்றோர் அமைச்சர் முன்னிலை யில் இவனை நிறுத்தி இவன் அஞ்சா நெஞ்சத்துடன் செய்த தீதினை வெளிப்படுத்தி, அதன்பின் வ்வவையத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/276&oldid=1581209" இலிருந்து மீள்விக்கப்பட்டது