உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் 12

கருத்தை யொட்டி இவனை ஒறுத்தலே அரசின் முறைக்கு ஒத்த தாகுமென நினைந்து இவனைச் சிறைப்படுத்தி வைத்தேன். இவன் அச்சிறைக் காவலையுங் கடந்து, எம் புதல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, சேய்மைக் கண் உள்ள ஓரங்கல் நாட்டு வேந்தரும்என் நண்பருமான பிரதாபருத்திரரிடஞ் சென்று, அம் மன்னனையுந் தன்வயப்படுத்திக் கொண்டனன். இவன் செய்த அடாத செயலை எவர்தாங் குற்றமாக நினையார்? வேறு எவ்வரசன்றான் இவனை ஒறாது விடுவா ான்?

கம்பர் : (இரந்த முகத்துடன்) மன்னர்பிரான் பிழை பொறுத்தல் வேண்டும். இளவரசியார் இசைவுபெற்று உவளகத்தில் இவன் அவர்பாற் சென்றிருந்ததனைக் களவாகக் கருதலாமா? ஒருவரை யொருவர் இன்றியமையா ராய்க் காதல் கொண்டார்க்குள் பார்க்குள் இத்தகைய ஒழுகலாறு நிகழ்வது இயல்பேயாதலை முன்னுங் கண்டோம். எல்லாம்வல்ல சிவபிரானே தக்கன் மகளாய்த் தோன்றிய உமைப்பிராட்டியை, அவள் தந்தையின் கருத்துக்கு மாறாக மறைவிற் கொண்டு சென்று மணக்கவில்லையா? அருச்சுனன் துறவியுருவிற் சென்று சுபத்திரையை மறைவிற் கவர்ந்து சல்லவில்லையா? நளன் தன் உருவம் புலனாகாமல் தமயந்தியின் உவளகத்திற் புகுந்து அவளது கருத்தொருப்பாடு பெற்றுச் செல்லவில்லையா? இத்தகைய காதல் நிகழ்ச்சிகள் முன்னும் பல நிகழ்ந்ததனை எண்ணிப் பார்த்து, என் மகனையும் இளவரசியையும் மன்னித்து மணம் பொருத்த அரசர் பருந்தகை மனம் பற்றுதல் வேண்டும்.

அரசன் : (பின்னுஞ் சினந்து) கம்பரே, அஃ அஃதொரு காலும் நடவாது. அரசின் கடுங்காவலையுங் கடந்து இளவரசியின் கற்பையுங் குலைத்த இத்தீயன் அம்பிகாபதியை

இருகூறாக்கி என் அரசியன் முறையை

செயற்பாலது! (ஒட்டக்கூத்தரை நோக்க)

நடத்துதலே

கூத்தர் : (தாம் நெடுங்காலங் கொண்ட வஞ்சந் தீர்ப்பாராய்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/277&oldid=1581210" இலிருந்து மீள்விக்கப்பட்டது