உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

ஐந்தாம் நிகழ்ச்சி : பதினான்காம் காட்சி

களம் : அரண்மணை வெளி

காலம் : பிற்பகல்

கம்பர் : (அழுத கண்ணினராய்) அப்பா நயினா, நின் உயிர்த்தோழன் மடிந்தான்! அவன் மடிந்தும் யான் மடிந்திலேன்!

“பரப்போத ஞால மொருதம்பி யாளப் பனிமதியந்

துரப்போ னொருதம்பி பின்வரத் தானுந் துணைவியுடன் வரப்போன மைந்தற்குத் தாதை பொறாதுயிர் மாய்ந்தனனெஞ் சுரப்போ எனக்கிங் கினியார் உவமை யுரைப்பதற்கே”

எப்

நயினார் : (அழுதபடியே) ஆ! என் ஆருயிர்த் தோழன் மடிந்தனனா? ஐயோ அம்பிகாபதி! இனி னி உன்னை பிறப்பிற் காண்பேன்! நின்னருமைத் தங்கை காவேரியும் மடிந்தனளே! தீ வினையேன் இன்னும் ஏன் இப்பாழுமுயிர் தாங்கி நிற்கின்றேன்! (தன் உடைவாளை யுருவித் தன் மார்பில் அதனை ஓச்ச முனைகின்றான்.)

கம்பர் : (அவன் கையைப் பிடித்துத் தடுத்து) அப்பா! நாம் பழிக்குப்பழி வாங்கல் வேண்டும்! ஆதலால், நீ நின் உயிரைப்போக்குதல் தக்கதன்று.

(இந்நேரத்தில் பிரதாபருத்ரனிடமிருந்து வந்த ஒற்றர் வணங்குகின்றனர்.)

கம்பர் : (ஒற்றரை நோக்கி) நீடு வாழ்க, நும்வேந்தர் பெருந்தகை! நுங்கள் வேந்தர் பெருமான் வந்து விட்டனரோ?

ஒற்றர் : ஆம், புலவர் பெருமான்! அதனைத் தங்கட் கறிவிக்கவே எங்களை எம்மன்னர்பிரான் இங்கு விடுத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/279&oldid=1581212" இலிருந்து மீள்விக்கப்பட்டது