உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

247

அவர் இந்நகர்ப்புறத்தே படையுடன் வந்து தங்கியிருக்கின் றனர்; தங்கள் வருகையை எதிர்நோக்குகின்றனர்.

கம்பர் : நம் மன்னர்பிரானே இங்கென்னிடம் வரல் வேண்டுவதாய் உளது! இதோ! இங்கு நிற்கும் எம் அமைச்சர் மகனே நுங்களுடன் போந்து நம் மன்னர்பிரானைக் காண்

பன்.

(நயினார் பிள்ளை ஒற்றருடன் பிரதாப ருத்திரனிடஞ் சென்றுவிடக், கம்பர்க்கெதிரே சோழன் மகனும் அவனைப் பின்றொடர்ந்து பச்சையும் வருகின்றனர்.)

பச்சை : (பதை பதைத்துக்கூவி) அப்பா! அப்பா! இப்பாவி நம்காவேரியைக் கொன்றுவிட்டுப் போகின்றான்! இவனைப் பிடியுங்கள்! பிடியுங்கள்!

கம்பர் : (சோழன் மகனைத் தடுத்து நிறுத்தி) அடே! பாவி! நின்தந்தை என்மகனைக் கொலை செய்தான்! நீ ஏனடா என் மகளைக் கொலை செய்தாய்?

சோழன் மகன் : யான் உங்கள் மகளைக் கொலை சய்யவில்லை. என் சொல்லைக் கேளாமல் அவளே விரைந்தோடிக் கிணற்றிற்குதித்து மாய்ந்தாள்!

பச்சை பொய்! அப்பா! காவேரி எவ்வளவோ சொல்லியுங் கேளாமல், இவன் அவளைக் கற்பழிக்க வலிந்து துரத்தினான்! தடை செய்த என்னையுங் கடுமையாய் உதைத்துக் கீழே தள்ளிவிட்டான்! துணையற்ற தன் நிலைமையையுணர்ந்து காவேரி விரைந்தோடிக் கிணற்றில் விழுந்து மாண்டாள்! என்செய்வோம்! அப்பா! (ஓவென்று அலறி அழுகின்றாள்.)

கம்பர் : (ஆற்றாமையுஞ் சீற்றமும் மிக்கு) அடே! பாவி! நீயும் நின் தந்தையும் எங்குலத்தை வேரோடு அழித்த னிரே! இதோ! பார்! உன் குலத்தையும் நான் வேறோடழித்துத் தொலைக்கின்றேன்!

(தம்மடியிலிருந்த எழுத்தாணியையெடுத்து அவனை மார்பிற்குத்தி மாய்க்கின்றார். உடனே அரசியற் காவலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/280&oldid=1581213" இலிருந்து மீள்விக்கப்பட்டது