உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

  • மறைமலையம் -12

கம்பரைப் பிடித்துக் கட்டி, அம்பிகாபதி வெட்டுண்டு கிடக்குங் கொலைக்களத்தின் வழியே அரசன்பால் ஈர்த்துச் செல்கின்றனர்.)

கம்பர் : வெட்டுண்டு கிடக்கும் மகனைப் பார்த்து அழுது புலம்பி :

“மட்டுப்படாக் கொங்கை மானார் கலவி மயக்கத்திலே கட்டுப்பட்டா யென்ன காதல் பெற்றாய் மதன் கையம்பினால் பட்டுப்பட் டாயினுந் தேறுவையே யென்று பார்த்திருந்தேன் வெட்டுப் பட்டாய் மகனே முனைநாளின் விதிப்படியே”

அரண்மனை வெளியில் வில்லுங்கணையும் ஏந்தி நிற்குஞ் சோழன் முன்னே காவலர் கம்பரைக் கொணர்ந்து கின்றனர்.)

நிறுத்து

சோழன் : (கம்பரைப் பார்த்துக் கடுகடுத்த முகத்தின னாய்) ஓய்! கம்பரே! நீர் கற்ற கல்வியும் நும்மகன் கற்ற கல்வியும் நும்மை ஆளும் மன்னனுக்கே தீங்கிழைக்கத்தான் பயன்பட்டன போலும்!

கம்பர் : என்மகன் ஏதுந் தீது செய்திலன். இளவரசியும் என் மகனுங் காதல் கொள்ளுதற்கு வழிசெய்த நீயே முறைதவறி என்மகனைக் கொலை செய்தாய். பாவி! நின் மகனோ நின்னைப் போலவே முறைதவறிக் கற்பிற் சிறந்த என் மகளைக் கொலை செய்தான்! ஆதலால், அவனை யான் பழிக்குப் பழிவாங்கியதிற் பிழையொன்றுமில்லை.

சோழன் : (சீற்றம் மிக்கு) கொலைகாரனான உன்னை இதோ கொல்கின்றேன் பார்!

(வில்லை வளைத்துக் கணையைத் தொடுத்து விடுகின்றான்.)

கம்பர் : (தம்மார்பிற் பாய்ந்த கணையைப் பிடுங்கவே குருதி பெருகிச் சொரிய)

“வில்லம்பிற் சொல்லம்பு மேதகவே யாதலினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/281&oldid=1581214" இலிருந்து மீள்விக்கப்பட்டது