உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

வில்லம்பிற் சொல்லம்பே வீறுடைத்து - வில்லம்பு பட்டதடா என் மார்பிற் பார்வேந்தா நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல்”

249

(என்னுஞ் செய்யுளை வசையாகப் பாடிவிட்டு நிலத்தே விழுந்து விடுகின்றார். இந்நேரத்திற் பெரிதோடி வந்த பிரதாபருத்ர வேந்தன் நிலத்திற் குருதி சோரக்கிடக்குங் கம்பரைப் பார்த்துக் கதறிக் கையால் அவரது முகத்தைத் தடவித், தன் பட்டாடையால் அவரது மார்பிற் சொரியுங் குருதியைத் தடுத்துப் புண்ணை அடைக்கின்றான்.)

கம்பர் : (மெலிந்த : (மெலிந்த குரலில்) வேந்தே! யான் உயிர் பிழையேன்! என் மகனை முறைதவறிக் - கொன்ற - இவன் வேறொரு நல்

காவலன்

-

அல்லன்

-

நீக்கி இவனை

-

லோனை - இந்நாட்டுக்கு அரசனாய் - நிறுத்து!

-

பிரதாபருத்ரன் : (விலகி நின்ற சோழனைப் பார்த்து) ஏ மன்னனே! புலவர் பெருந்தகையாகிய இக்கம்பரையும், இவர் தம் அருந்தவப் புதல்வனையும் நடுவுநிலை சிறிது மின்றிக் கொன்ற நீ இச்சிறந்த தமிழ்நாட்டுக்குக் காவலனாய் இருக்கத் தக்கவன் அல்லை! உடனே நீ இவ்வரசு துறந்து கானகத்தேகு! அல்ல தன்னுடன் போர்புரிந்து கூற்று வனுலகிற்குச் செல்!

சோழன் : (சினந்து) நீ என்போல் ஓர் அரசன். என் அரசியல் முறையில் தலையிட்டு எனக்கு இங்ஙனம் கட்டளையிட நீயார்?

பிரதாபருத்ரன் : அடே பேதாய்! முறை தவறிய உன்னை, முறைதவறாதார் எவரும் ஒறுத்தற்குரிமை யுடையார்.

சோழன் : ஏ முழுமகனே! நின்னுடன் வீணே யாட நிற்கிலேன். போர்க்களத்தில் நினதாண்மையைக் காண்பேன். நீ நின்படையுடன் அங்கு வரும் நாளைக் குறிப்பிடு! யானும் அங்கென் படையுடன் போந்து நின் ன் ஆண்மையை அடக்குவேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/282&oldid=1581215" இலிருந்து மீள்விக்கப்பட்டது