உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

250

மறைமலையம் 12

பிரதாபருத்ரன் : ஏ! இரக்கமிலாக் கன்னெஞ்சனே! நீ செய்த கொடுங் கொலைக்காக, என் படையிலும் நின் படையிலுங் கூலிக்கமர்ந்த குற்றமில்லா வயவரைப் போர் செயவிட்டு ஏன் மாய்க்கப் பார்க்கின்றாய்? (தன் வாளை ஏந்தி) இதோ நீ ஆண்மையுடையவனானால் நின்வாளை ஏந்தி என்னுடன் தனித்து நின்று போர்செய்! புலவர் பெருமக்களைச் சிறிதும் அறம் இன்றிக் கொன்ற உன்னை மடித்தால் எனக்குப் பெரும் புகழ் உண்டு! யான் மடிந்தால் எனக்குத் துறக்கம் உண்டு!

(சோழனும் பிரதாபருத்ரனும் பெருஞ்சீற்றத்துடன் போர்புரிவதை இறக்குந் தறுவாயில் உள்ள கம்பர் கவலைக் கண்ணுடன் நோக்குகின்றனர். சிறிது நேரத்திலெல்லாம் பிரதாபனால் வெட்டப்பட்டுச் சோழன் நிலத்தேவிழக், கம்பர் பிரதாபனுக்கு நன்றி செலுத்துங் குறிப்போடு உயிர் துறக்கின்றார்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/283&oldid=1581216" இலிருந்து மீள்விக்கப்பட்டது