உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

❖ LDM MLDMOLD-12 →

காதல் பெருகக் கலந்தார் தம்மைக் கனலிற் கொடிய உள்ளத்தாற் சாதல் புரிந்தான் தகவில்லாத் தந்தை அவன்பால் தமியேன் பிறந்த

தீதல் லதுவே றொருதீ திங்குச் செயக்கண் டறியேன் தீயேனால் வீதல் அடைந்தீர் இனியாவி விண்டே யழிவேன் விரவீர்! கரவீர்!

ஓருயிரான நம்மில் ஒருபால்

ஒழிந்து பிரிந்தால் ஒருபாதி பாருறு வாழ்விற் பட்டு மயங்கல் பரிசோ பகரீர்! பகர்மாதர் சீருறு கற்பிற் செஞ்சொற் செயலிற்

சிறந்து திகழச் சிறியேனை நீருறு வானிற் கொண்டே பெயர்வீர்!

நிகரில் அறிவீர்; குறியீரே!

பிருதாபருத்ரன் : ருத்ரன் : (ஓடிவந்து ) அம்மா! அம்மா! குழந்தையில்லா எனக்குச் சிறிது காலமேனுங் குழந்தையாய் இருந்தனையே! கைகடந்து போனதற்கு ஏங்காதே! என்னைத் தியங்கவிட்டு உயிர் துறவாதே! துறவாதே!

அமராவதி : (திரும்பிப் பார்த்து) அப்பா! அப்பா! நீங்களே என் ஆருயிர்த் தந்தை! உங்கள் வயிற்றிற் பிறக்கும் தவமில்லாத் தீவினையேன் என்னருமைக் காதலனைப் பிரிந்து இம் மண்ணுலகிலிருந்து மண்ணாகக் கடவேனோ! என் இன்னுயிர்க் கணவனுடன் பொன்னுலகு புகுவேன்!

(ஏங்கி, அம்பிகாபதி மார்பின்மேல் விழுந்து உயிர் துறக்கின்றான். அமைச்சர் நம்பிப்பிள்ளை வருகிறார்.)

நம்பிப்பிள்ளை : (பிரதாபருத்தினை வணங்கி) மன்னர் பெருமானே! இக்கொடிய காட்சியினைக் காணவும், இதற்கு முன்னே என் மகனை இழக்கவும் எத்துணை தீவினை செய் தேன்! தாங்கள் உற்ற நேரத்தில் இந்நகருக்கு வராதபடி ஊழ்வினை தங்களைத் தடை செய்தது! (கண் கலங்குகின்றார்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/285&oldid=1581218" இலிருந்து மீள்விக்கப்பட்டது