உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

253

பிரதாபருத்ரன் : (பதறி) ஆம்! ஆம்! உற்றநேரத்தில் உதவி யாம்படி யான் இங்கே வர எவ்வளவோ துடிப்புடன் முயன்றும், அது பயன்படாமலே போயிற்று! தங்கள் புதல்வன் நிகழ்ந் தவைகளை அறிவிக்க வந்த அந்நேரத்திலேயே, சோழன் கம்பரைக் கொன்று விட்டான் என்று ஒற்றர் வந்து சொல்லக் கேட்டுத் துடித்துடித்தோடி வந்தேன். வந்த என் கண்ணெதிரே கம்பர் குருதிசோர நிலத்தே கிடக்குங் கொடுங் காட்சியினைக் காணுந் தீவினையேன் ஆயினேன்! அதன் மேலும், அருமை அம்பிகா பதியும் கற்பரசி அமராவதியும் ஒருங்குயிர் துறந்த இப்பொல்லாக் காட்சியினையுங் காண இன்னும் எவ்வளவு பெருந்தீவினை செய்தேன்!

(கண்ணீர் சொரிகின்றான்.)

நம்பிப்பிள்ளை : (உடனே வருந்தி) மன்னர் பெருமானே! என் செய்வது! கம்பரையும் அம்பிகாபதியையும் நாம் மட்டுமே அல்லாமல் இத்தமிழ் உலகமுமே இழந்துவிட்டது! முத்தமிழ் வல்ல அம்பிகாபதி அமராவதியிருவரும் ஒருவரை யொருவர் இழந்துவிட்டனர்! அம்பிகாபதியையும் அவர் அருமைத் தங்கை காவேரியையும் என் மகன் நயினார் இழந்து விட்டனன்! நயினாரை யான் இழந்துவிட்டேன்!

இது சொல்லிக் கதறியழுகின்றார்.)

(சிறிது நேரஞ் சென்று இருவரும் ஆறுதல் உற்றபின்)

பிரதாபருத்ரன் : அறிவான் ஆன்ற ஐய! அன்பிலும் அறிவிலுஞ் சிறந்த இவர்களை இழந்தபின் அரசு செலுத்து வதில் எனக்கு மனஞ்சிறிதும் பற்றவில்லை. யான் எனது நாடு சென்று அரசியலை வேறொருவர்பால் ஒப்படைத்துவிட்டுத் தவவாழ்க்கையில் அமர்வேன். இச்சோழ நாட்டரசியலைச் சோழ மன்னர் குடியில் வந்த ஒருவர்பால் விடுத்து முறை செய்யுங்கள்! (போய் விடுகின்றான்.)

வி

அன்பினுருக் கொண்ட அம்மையினோ டென்றும் ஆர்ந்துருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/286&oldid=1581219" இலிருந்து மீள்விக்கப்பட்டது