உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

தமிழக மறுமலர்ச்சியின் தந்தை

மறைமலை அடிகள்

இருபதாம் நூற்றாண்டில் தமிழை வாழ்வித்த சான்றோர்களின் எண்ணிக்கை பலபட விரியும் தன்மை யுடையது, எனினும் ஒரு சிலரின் பணியைத்தான், தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ் மாணவர்களும் அறிந்துள்ளனர். ஆனால் இதுகொண்டு ஒரு சிலர் நீங்கலாக ஏனையோர் தமிழுக்கு நிலையான பணியாற்றவில்லை என்று கருதுவது தவறுடைத்தாகும்.

பாட்டிற்கொரு புலவன் பாரதி தன் பாட்டுத் திறத்தால் பைந்தமிழை வாழ்வித்ததை நாம் மறுப்பதற்கில்லை. அவருடைய நாட்டுப்பற்றும், அவர் கையாண்ட எளிய உணர்ச்சி மிக்க நடையும் காலத்தின் தேவையை நிறைவுசெய்து தமிழ் மக்களை புதிய வழியில் இட்டுச் சென்றதை நம்மவர் ஏற்றே யாக வேண்டும். அதே வேளையில் தமிழ்மொழியில் படிந்த எல்லை மீறிய பிறமொழிமாசினைக் களைந்து தமிழின் தூய்மையைப் பேணி, தமிழைர் தமிழாகவும், தமிழனைத் தமிழனாகவும் வாழவைத்த பெருமை மறைமலையடி களாருக்கேயுண்டு.

மொழி ஒரு இனத்தின் விழி மட்டுமல்ல. மொழி அதனின் உயிருமாகும். ஒரு மொழி அழிகின்றபோது அம்மொழியைப் பேசுகின்ற இனமும் அழிகின்றது. இதனைத் தான் ஒரு ஆங்கில அறிஞன் “ஐக லடிர றயவே வடி னநளவசடில ய யேவடிை கசைளவ னநளவசடில வைள் டயபேரயபந்" நீ ஒரு தேசிய இனத்தை அழிக்க விரும்பின் முதலில் அவ்வினத்தில் மொழியை அழி என்று கூறினான். தே உண்மையை மற்றுமோர் ஆங்கில அறிஞன் “டுயபேரயபந ளை வாந ளடிரட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/290&oldid=1581223" இலிருந்து மீள்விக்கப்பட்டது