உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

❖ LDM MLDMOED -12 →

டிக வாந யேவடிை ேகை லடிர சந்அடிஎந வை வாந யேவடைே ளை னநயன" ஒரு தேசிய இனத்தின் உயிர் நாடி அதன் மொழியாகும். அது நீக்கப்படின் அவ்வினம் உயிரற்ற பிணமாக மாறும், என்று கூறிய கூற்றுக்கள் வெறும் உணர்ச்சி நிலையில் கூறிய கூற்றுக்கள் அல்ல. அவை ஆழ்ந்த பட்டுணர்வில் எழுந்த கூற்றுக்களே யாகும். இவ்வுண்மையைத் தான் புரட்சிக் கவிஞன் பாரதி தாசனும் “தமிழுக்கு அமுது என்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று அழகுபட ஆணித்தரமாக தமிழுக்கும் தமிழ் இனத்திற்குமுள்ள பிரிக்கமுடியாத பிணைப்பை பீறிட்டு எழும் உணர்ச்சியுடன் மொழிந்துள்ளார்.

-

மேற்கூறிய கூற்றுக்கள் அனைத்தையும் நாம் நிலைவிற் கொள்ளும்போதுதான் மறைமலையடிகளாரின் மாண்பினை நாம் உணரும் நிலை ஏற்படுகிறது. தமிழன் தன்மொழி எது, தன் பண்பாடு எது, தன் நாகரீகம் எது, தனது நெறி எது, தனது வாழ்வியல் முறை எது என்பதை உணராது தத்தளித்து தன் நிலை மறந்திருந்த வேளையில் தமிழனுக்கு தன் இன உணர்வை, மொழி உணர்வை ஊட்டியவர் மறைமலை யடிகளார். இன்று ஆட்சி மன்றங்களிலும், தமிழ் மன்றங் களிலும் நல்ல தமிழ் தூய தமிழ் அரச்சோச்சுகின்ற தென்றால் அதற்கு அடிகோலிய பெருமை, தானே ஒரு தனி இயக்கமாக விளங்கி எதிர்ப்புகள் அனைத்தையும் துணிவுடன் தாங்கிய மறைமலையடிகளார் ஆற்றிய பணியின் விளைவே வி கொள்கையுடன் மாறுபடுவோர் கூட ஏற்றேயாகவேண்டும். தனித்தமிழ் நடையை ஒரு காலத்தில் எள்ளி நகையாடியோர் கூட இன்று நல்ல தமிழில் எழுதுவதற்கு அடிப்படைக் காரணம் நல்ல தமிழில் எழுதா விட்டால், நல் அறிஞர்களின் மதிப்பினையோ, வாழ்த் தினையோ பெற முடியாததோடு, தமிழ்ப் பொதுமக்களும் வரவேற்க மாட்டார்கள் என்ற நிலையும் இன்று உருவாகியுள்ளது. வை எல்லாம் மறைமலையடிகளாரின் இயக்கம் ஏற்படுத்திய தாக்கமேயாகும்.

என்பதனை அவரின்

வ்விதம் நல்ல மாறுதல்கள் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுவரினும் தென்னகத்தில் லோக்ஷக்ஷ்பா, ராஜசபா, நயாபைசா, ஆகாஷவாணி போன்ற இந்திமொழிச் சொற்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/291&oldid=1581224" இலிருந்து மீள்விக்கப்பட்டது