உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

259

ஊடுருவலால் தமிழின் தனித்தன்மை அழிகின்ற பேரின்னல் அங்கு ஏற்பட்டிருக்கையில் ஈழத்திலோ ஜாதி சம்பத, சலுசல, லக்சல, சதோச, ஓசுசல, ஜனவாசம் போன்ற சிங்கள மொழிச் சொற்களின் ஊடுருவல்களும் நம் செந்தமிழின் சீர்மையை சீரழிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

சமயமொழிகளாக வந்த வடமொழியும் பாளியும் காலப்போக்கில் தமிழின் தனித்தன்மையை அழித்து நிற்கையில் ஆளுமினங்களாக படையெடுத்து வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், அரேபியர், ஆங்கிலேயர் ஆகியோரும் தம்மொழிச் சொற்களை எம்மொழி மீது திணித்து எம்மொழியின் தனி இயல்பினை அழிப்பதில் இன்பம் கண்டனர். இன்று இந்திய துணைக்கண்டத்தில் ஆளும் இனத்தின் மொழியாக விளங்கும் இந்தியும், ஈழத்தில் ஆளும் இனத்தின் மொழியாக விளங்கும் சிங்களமும் எம்மொழியை அழித்து காலப்போக்கில் தத்தம் மொழிகளின் கிளைமொழியாக தமிழை ஆக்க வெறி கொண்டு முனைந்து நிற்கும் காட்சியினை நாம் காண்கிறோம். இவ்வெறிப் போக்குக்கு அடிமையாகாது எம்மினத்தின் தனித்துவத்தைப் பேணி வாழவேண்டின் எம் மொழியின்

தூய்மையை

எந்நிலையிலும் காக்க நாம் உறுதி பூணவேண்டும். தனியொரு மானிடனாக நின்று தன்னை எதிர்த்த எதிர்ப்புகளை யெல்லாம் துகளாக்கி வெற்றி கண்டவர் மறைமலையடிகளார். தனியொரு மானிடரால் இவ்வெற்றியை ஈட்ட முடியுமெனில் தமிழ் இனம் ஒருங்கிணைந்து தன்னிலை உணர்ந்து தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதி பூணின் எவரும் அதனைத் தடுக்க முடியாது. இன்று தமிழனை எதிர்நோக்கும் பெரும் அழிவுக்கு

L

அடிப்படைக்காரணம் பிறநாட்டுப் படையெடுப்போ அல்லது பிற இனத்தின் ஆட்சியோ அல்ல. இவையனைத் திற்கும் மேலாகத் தமிழனுக்கு தம் மீது நம்பிக்கையின்மையே இவ்வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது. இவ்வுண்மையையே உலகப்புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஆர்னல்ட் ரொபின்பி (Arnold Toynbe) பின்வருமாறு கூறுகிறார். "Out of the 21 notable civilizations 19 perished not from external conquest but from the evaporation of belief within" (குறிப்பிடத்தக்க 21 நாகரீகம் படைத்த நாடுகளில் 19 நாடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/292&oldid=1581225" இலிருந்து மீள்விக்கப்பட்டது