உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் 12

அழிவுற்றதற்குக் காரணம் வெளிநாட்டுப் படையெடுப்பு அல்ல. ஆனால் தம்மீது தாம் நம்பிக்கையை இழந்தமையே ஆகும்.) எனவே ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக ஒவ்வொரு தமிழ் L மாணவனும், மாணவியும் தன் மொழியின் தனி ஆற்றலில் நம்பிக்கை வைத்து தனித்தியங்கவல்ல அதனின் தன்மையில் உறுதிபூண்டு செயலாற்றின் வெற்றி நமதே. எம் அறிவின் பஞ்சத்தை, எம்மொழியின் பஞ்சமாக ஆக்காது காலத்தின் கருத்தோட்டத்திற்கேற்ப நம் மொழியை பல துறைகளிலும் வளமாக்க முயல்வது எமது தலையாய கடனாகும்.

உந்துவதற்காகவே

மறைமலை

இவ்வுணர்வினை யடிகளாரின் வாழ்வையும், பணியையும் இச்சிறு நூல் வடிவில் தமிழ் மக்களின் கைகளில் தவழ விடுகிறோம். தமிழ் முதியோரின் போக்கில் நாம் நம்பிக்கையிழந்து வருகிறோம். ஆனால் எம் அருமைத் தமிழ்த் தம்பி தங்கைகள் மீது எமக்கு எல்லையற்ற நம்பிக்கையுண்டு. என்மனோர் தொடக்கி வைத்த இப்பணியை எம் இளைஞர்கள் நிறைவேற்றி வைப்பார்கள் என்ற உணர்ச்சி எம்மை உந்தியபடியே இருக்கின்றது. எம் தம்பி, தங்கைமார்கள் எம்மைக் கைவிடமாட்டார்கள் என்று நம்புகிறோம்.)

மொழியில் செம்மையிருப்பின் கருத்தில் கருத்தில் தெளிவு பிறக்கும். கருத்துத் தெளிவோடு ஆட்சி அமையின் அவ் ஆட்சியில் அமைதி நிலவும். எனவே செந்தமிழில் செம்மை காண விழைந்த மறைமலையடிகளாரின் முயற்சி ஆட்சியிலும் அமைதிகாண துணி நிற்கிறதென்பது எம்மனோர் துணிவு; அத்தகைய பெருமகனின் நூற்றாண்டு நிறைவு விழாவினை உள்ள நிறைவோடு வழுத்தி வாழ்த்துவோமாக. அப்பெருமகனுக்கு இச்சிறு நூல் எம் அன்பின் காணிக்கையாக அமையட்டும். இப் படைப்பில் நாம் பெறும் அமைதியும் நிறைவும் சொல்லும் தன்மையுடையதல்ல. உண்மையிலேயே சொல்ல முடியாத பேரின்பத்தில் ஆழ்ந்துள்ளோம்.)

அன்பன் ஈழவேந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/293&oldid=1581226" இலிருந்து மீள்விக்கப்பட்டது