உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

261

மறைமலையடிகள்

ஞானசம்பந்தரும் மறைமலையடிகளும்

“திசையனைத்தின் பெருமையெல்லாம் தென்திசையே வென்றேற மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல

அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல இசைமுழுதும் மெய்யறிவும் இடம் கொள்ளும் நிலைபெருகத்”

தோன்றியவர் தமிழ் ஞானசம்பந்தர் என்று சேக்கிழார் தகைசான்ற முறையில் ஞானசம்பந்தர் புகழ் பாடினார். ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய ஞானசம்பந்தர் பற்றி சேக்கிழார் செப்பிய மேற்குறித்த செஞ்சொற்பா, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி. இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதிவரையில் வாழ்ந்த மறைமலையடிகளார்க்கும் முற்றும் பொருந்தும். திசையனைத்தின் பெருமையெல்லாம் தன்திசையே வெல்ல அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்லத் தோன்றிய ஞானசம்பந்தர், இவ்வுலகில் வாழ்ந்தது பதினாறு ஆண்டுகள் தான். அவர் விட்டகுறையை நிறைவு செய்வதுபோல் தமிழகத்தில் தோன்றிய மறைமலையடிகளார், ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து, நிலையான பணி பல ஆற்றி, அம்பலவாணர் திருவடி அடைந்தார்.

தமிழ்த் தென்றல் வாழ்த்தும் தமிழ் மலை

6

வேற்றுமொழி வேற்று நெறி வேற்றுப் பண்பாடு நாகரிகம் ஆகிய வேண்டாத பண்புகள் பல தமிழகத்தைச் சூழ்ந்தன. தமிழகம் இத்தாக்குதலால் தன் நிலை தவறி, தன் உணர்வு கெட்டுத் தத்தளித்த வேளையில், தமிழைத் தமிழாக, தமிழரைத் தமிழராக வாழவைத்தார் மறைமலையடிகள். அத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/294&oldid=1581227" இலிருந்து மீள்விக்கப்பட்டது