உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் 12

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்ற திருமூலர் திருமொழிக்கமைய செந்தமிழர் செந்நெறியாம் சிவநெறியை சிந்தையில் ஏற்றி அதில் பதிந்திருந்த மாசினை நீக்கி மங்காது ஒளிவிடச் செய்தார். இன்பத் தமிழால் இறைவனைப் பாடி அன்பைப் பெருக்கிய இவ்வடிகளை - தீந்தமிழ் நிலவு, தமிழ்க்கடல், தமிழ் மலையென தமிழகம் வாழ்த்தியது, வழுத்தியது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற கனிவுடைக் கூற்றிற்கமைய இத்தமிழ் மலையை தமிழ்த் தென்றல் திரு.வி.க. பின்வருமாறு பெருமித உணர்ச்சியோடு வாழ்த்துகிறார். “தென்னாடு பன்னெடுங் காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமை ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும், மரமும் முழங்கும்.”

அடிகள் பேச்சு., பல பேச்சாளரைப் படைத்தது. எழுத்துப் பல எழுத்தாளரை ஈன்றது. நூல் பல நூலாசிரியரை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது. திரு.வி.க. வின் இவ்வாழ்த்துரை வெறும் புகழுரையல்ல. நூற்றுக்குநூறு உண்மையுள்ளது என்பதை அடிகளார் தென்னகத்தில் தோன்றுமுன் நிலவிய சூழ்நிலையையும் அடிகளார் தோன்றிய பின்பு ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களையும் வரலாற்றுக் கண்கொண்டு ஆராய்வார் ஏற்றேயாவர்.

பிறப்பும் தோற்றமும்

அறிவறிந்த இப்பெருமானை அருந்தமிழ் உலகிற்குத் தத்தளித்த பெருமை நாகையில் நலம்பல பெற்று வாழ்ந்த சொக்கநாதருக்கும் அன்னவர் மனைவி சின்னம்மையாருக்குமே உரியது. ஈன்ற பொழுதினிற் பெரிதுவக்கு முறையில் சான்றோன் ஆக்கிய அடிகளாரின் அன்னையையும், அறிஞர் அவையத்து முந்தியிருக்கச் செய்த அவரின் தந்தையையும், பல்கலை அறிவூட்டிய அவரின் அறிவுத்தந்தை சோமசுந்தர நாயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/295&oldid=1581228" இலிருந்து மீள்விக்கப்பட்டது