உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

263

கரையும் சிந்தையில் நன்றி உணர்வோடு போற்றுவோமாக. மறை மலையடிகளாரைப் பெற்றெடுத்த பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் வேதாசலம் என்பதே. அவரின் சமயப்பணி அவரை சுவாமி வேதாசலம் ஆக்கியது. சுவாமி வேதாசலம் அவர்களின் உள்ளத்தில் ஊற்றெடுத்த தனித்தமிழ் உணர்ச்சி அவரை மறைமலையடிகள் ஆக்கியது. வேதம் மறையாக மலர அசலம் மலையாக உருவெடுக்க சுவாமி அடிகளாக மாறி தமிழ் காக்கும் மறைமலையடிகளாக விளங்கினார். திருவேங்கடமும் தென்குமரியும் தமிழகத்தை அரண் செய்யும் இயற்கை மலைகள் எனின் தமிழுக்கு அரண் செய்த மானிடமலை மறைமலை என்பதை யாம் மறக்க முடியாது. தமிழ்மொழி வரலாற்றை வரைவோர் மறைமலையடிகளாரின் பணியை மறந்தோ, மறைத்தோ வரையமுடியாதபடி மறைமலையடிகளாரின் வாழ்வும் வளமான பணியும் தமிழ்மொழி வரலாற்றோடு பிரிக்க முடியாத முறையில் பின்னிப் பிணைந்து விட்டது. சுவாமி வேதாசலம் மறைமலையடிகளாக மாறிய பின்பே கனக சபாபதி பொன்னம்பலவாணராகவும், கனகேந்திரன் ஈழவேந்தனாகவும், பாலேந்திரன் இளங்கோவாகவும், பாலசுந்தரம் இளவழ னாகவும், பாலசுப்பிரமணியம் இளமுருகனாகவும், கலியாண சுந்தரன் மணவழகனாகவும், சோமசுந்தரன் மதியழகனாகவும், ஈஸ்வரி இறைவியாகவும், சரஸ்வதி நாமகளாகவும், லட்சுமி திருமகளாகவும் மாறிவருவதை யார்தான் மறுக்கமுடியும்.

தனித்தமிழ் இயக்கம்

மறைமலையடிகளாரின் பைந்தமிழ்ப்பணி சென்னை கிறித்தவர் கல்லூரியில் தொடங்கியது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் அங்கு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறந்த தமிழ்ப் பேரறிஞர்களை உருவாக்கிய பெருமையையும் தேடிக்கொண்டார். பின்பு பல்லாவரம் போந்து துறவுபூண்டு பொதுநிலைக் கழகம் தோற்றுவித்து இறுதிவரை செந்தமிழ்ப் பணியும் சிவவெறிப் பணியும் சிறப்புற ஆற்றினார். மறைமலை யடிகளாரும், அன்று வாழ்ந்த ஏனைய தமிழ் அறிஞர்போல், தமிழில் பிறமொழிச் சொற்களை கலந்தே பேசியும் எழுதியும் வந்தார். ஆனால் தமிழ்மொழி வரலாறுபற்றி அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/296&oldid=1581229" இலிருந்து மீள்விக்கப்பட்டது