உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் 12

தொடர்ச்சியாகச் செய்துவந்த ஆராய்ச்சி சங்க காலத்தில் தூய்மையோடு விளங்கிய தமிழ், காலப்போக்கில் பிற நாட்டார் குறிப்பாக ஆரியர், அராபியர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரெஞ்சுநாட்டார், ஆங்கிலேயர் ஆகியோர் வருகையாலும். ஆட்சி அவர்கையில் சிக்கியதாலும் அவர்களோடு எம் இனம் கலந்து வாழ்ந்ததாலும் தமிழ் தன் தனித்தன்மையை இழக்கும் முறையில் பிற மொழிச் சொற்கள் எல்லையற்று எம் மொழியில் கலந்ததைக் கவனித்தார். பிற நாட்டார் நாகரிகம் பண்பாட்டோடு நம் இனத்தவர் கலந்து வாழும்பொழுது எம்மொழியில் பிறமொழிச் சொற்கள் அடித்தளத்தை, அதன் வடிவை - அதன் ஒலி அமைப்பையே முற்றாக மாற்றி அழிவுறச் செய்யும் நிலையைக் கண்டு வருந்தினார். இந்நிலை தொடர்ந்து நீடிக்கின் தமிழ் வெறும் பெயரளவில் தமிழாக வாழுமே யன்றித் தமிழ் தனது தனித்தன்மையைப் பாதுகாத்து அதனின் பண்டைய பெருமையை நிலைநாட்டி வாழ முடியாதென்பதை அடிகள் உணர்ந்தார்.டாக்டர் கால்டுவெல் (ஊயடன்றநட்ட) சிலேற்றர் ஆகிய ஆங்கிலப் பேரறிஞர்கள் திராவிடமொழிகள் பற்றி செய்த ஆராய்ச்சி இவரின் இக் கொள்கைக்கு அருந்துணையாக அமைந்து விளங்கின. சிறப்பாக டாக்டர் கால்டுவெல் அவர்கள் தனது “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” என்ற அரிய நூலில் தமிழ் வடமொழி யினதும் ஏனைய பிற மொழியினதும் கலப்பின்றிச் சொல் ஆட்சி சிறப்போடு தனித்தியங்கும் ஆற்றல் பெற்றுள்ளதென்று கூறிய கூற்று இவரின் மொழித் தூய்மைப்பணிக்கு வலிவூட்டியது. இவை அனைத்திற்கம் மேலாகப் பேராசிரியர் பிரீமன் (Freeman), பேராசிரியர் மிக்லியோன் (Meiklu john) ஆகியோரின் நூல்கள், பிறமொழிக் கலப்பினால் வளர்ந்துள்ள ஆங்கிலமே பிறமொழிக் கலப்பில்லாது தனது மொழித் தூய்மையை பெருமளவு காக்கும் நிலையில் உள்ளது என்று உரைத்த மொழிகள், மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஊக்கம் ஊட்டின.

தமிழில் வடசொற்கள்

தமிழில் சுருக்கமாய் விளக்கமாய்

னிமையாய்

எடுத்துரைக்கத்தக்க அரிய தமிழிச் சொற்களாகிய உடல், தலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/297&oldid=1581230" இலிருந்து மீள்விக்கப்பட்டது