உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

265

தோள் முதலிய சொற்கள் இருக்கும் போது சரீரம், சிரசு. புஜம் சிரசு.புஜம் என்றும் ஓசையை சப்தம் என்றும் இசையை சங்கீதம் என்றும் புதல்வன் புதல்வியை, புத்திரன், புத்திரி என்றும் நீரை, ஜலம் என்றும் சோற்றை, சாதம் என்றும் வடசொற்கைள வலிந்து புகுத்தி தமிழ் அன்னையின் இயற்கை உறுப்புகளை ஏன் அறுத்தெறிய முயல்கிறார்கள் என்று கேட்டு, மறைந்தொழியும் நிலையில் உள்ள தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்குப் புத்துயிர் ஊட்டினார் அடிகள். இன்று அக்கிராசனர் என்ற சொல் அழியத் தவைர் என்ற தகைசான்ற சொல் தலையெடுத்துள்ளது காரியதரிசி என்ற சொல் காண்பதற்கு அரியதாகி செயலாளர் என்ற செம்மைமிகு சொல் சிறப்புப் பெற்றுவிட்டது. பொக்கிஷாளர் என்ற சொல் புதைக்கப்பட்டுப் பொருளாளர் என்ற பொருள் பொதிந்த சொல் போற்றப்படுகின்றது. போஷகர் போன இடம் தெரியாது போகக், காப்பாளர் என்ற கனிவுமிகு தமிழ்ச்சொல் தமிழ் மன்றங்களில் பெரு வழக்கில் வந்துவிட்டது. மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தின் பயன், பெறுபேறு இளை என்பதை எந்த அறிவுடை மகனும் மறுக்கமாட்டான்.

ம்

அருந்தமிழில் அறிவியற் சொற்கள் :

6

மேலே கூறியவற்றைக் கொண்டு மறைமலையடிகள் தமிழில் இருந்து வடசொற்களை நீக்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்தார் என்று சிலர் கருதக்கூடும். ஆனால் உண்மையில் அவர் தமிழில் அறிவியல் சொற்கள் ஆக்கு வதற்கு ஆற்றிய பணியைப் பலர் அறியார் போலும். (Telepathy) என்ற சொல்லை தொலைவில் உணர்தல் என்றும் (Telephone) தொலைபேசி என்றும் (Telescope) தொலைநோக்கியென்றும் (Clairvoyance) அறிதுயில் என்றும், (Vitamins) உய்வுறை என்றும், (ஞசடிவநேைள) முதல்உணா என்றும், (Chlorides) பசுமஞ்சள் என்றும் (Amplitude) அலைவீச்சு என்றும் (Aerial) வானலை என்றும் (Carrierwave) ஊர்தி அலை என்றும் அரிய சொற்களை ஆக்கி அளித்துள்ளதை அவரின் அறிவியல் நூல்களை நுகர்வோர் நன்கு உணர்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/298&oldid=1581231" இலிருந்து மீள்விக்கப்பட்டது