உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

❖ LDMMLDMOLD-12 →

உரைநடையின் உயர்வு

மறைமலையடிகளாரை தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று மட்டும் கூறி அவரிள் புகழுக்கு எல்லைக்கோடு அமைத்தல் தவறு. அவர் தலைசிறந்த எழுத்தாளர். உரை யாசிரியர் என்பதையும் யாம் மறப்பதற்கில்லை. மறைமலை யடிகளாரின் உரைநடை தனித்தன்மை வாய்ந்தது. ஒருவரின் உளப்பாங்கினை அவரின் உடை நடை எடுத்துக்காட்டும் என்பதற்கமைய, மறைமலையடிகளின் தனி இயல்பை அவரின் உரைநடை எடுத்து இயம்பும். "மறைமலையடிகளார்

தனித்தமிழிலே தேனும் பாலும் கலந்தனைய தீஞ்சொற்சுவை மிக்க இழுமெனும் இனிய உயரிய உரைநடை எழுதும் ஆற்றல் உடையவர்” என்று பேராசிரியர் கா. சுப்பிரமணியம் பிள்ளை கூறும் கூற்று ஏற்புடையதே. மறைமலையடிகளின் உயரிய உரைநடைக்குச் சான்றாக ஒரு சொற் தொடரை கண்டு எடுத்துக் காட்டுவோம். "திருச்சிற்றம்பலக் கோவையார் என்னுந் தமிழ்த்தேன் நிறைந்த பொன் குடத்திருந்து ஒரு நறுந்தி வலையினை எடுத்து ஈண்டு நூஞ் செவி வாய்ப் பெய்குதும்' அடி கள் தன் உரைநடையில் தம்மோடு மாறுபடு பவர் கருத்தை மறுத்துரைக்கும் முறையும் பெருமிதமும் பேருவகையும் தரும் தன்மையுடையது; எடுத்துக்காட்டாக அறிவியல் கூற்றென மறுக்க, 'மிகப்பெரிதோர் ஏதமாம்' என்க. 'பொருத்தமில் ஏதமாம்'என்க. போலியுரையாம் என மறுக்க', 'அழிவழக்குப் பேசுதல் அடாதென்க’. 'நெகிழ்ந்துரையாடி இழுக்கினார் என்க.' என்ற சொற்றொடர்களைக் கூறலாம்.

பலவகை நூல்கள்

மறைமலையடிகளார் தமிழ் கூறும் நல் உலகிற்கு ஆக்கி அளித்த நூல்கள் பலவகைப்படும். அவரின் ஆராய்ச்சி நூல்கள் சமயச் சார்புடையதாகவும் சமயச் சார்பு அற்றவையாகவும் இரு துறைகளில் அமைந்துள்ளன. இவற்றை விட இலக்கியத்திறன் ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள், செய்யுள் நூல்கள், புதினம் நாவல் நாடகம், அறிவியல் எனப் பலபடவிரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/299&oldid=1581232" இலிருந்து மீள்விக்கப்பட்டது