உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix

நூலுரை

அடிகளார் இயற்றிய இறுதி நூலும், அவர் இயற்கை யின்பின் ஐந்தாண்டுகள் கடந்து கழகத்தால் வெளியிடப் பட்டதுமாம் நூல் (1954) இது. புலவர் புராணம், விநோத ரச மஞ்சரி, தனிப்பாடல் என்பவற்றைக் கொண்டும் பாவேந்தர் படைத்த பில்கணியமாம் (புரட்சிக்கவி) நூலைத் தழுவியும் புனையப்பட்ட நாடக நூல்.

அடிகளார் பன்மாண் பாடல் திறம், புனைவு மாட்சி, உரையாடல் எழில், நகைச் சுவை நறுக்கு என்பன வெல்லாம் ஒருங்கே அறியச் செய்யும் சொல்லொணாத் துன்பியல் படைப்பு இது.

இதனைக் கற்கும் எவருக்கும் அடிகளார் ஏன் தனிக் காவியப் புனைவு செய்திலர் என்னும் ஏக்கத்தை எழுப்பவல்ல எழில்மிகு பாவகைகள் தோற்றுவித்தல் ஒருதலை.

சில

நிகழ்ச்சிகள் ஐந்து, காட்சிகள் நாற்பது. நாடகமாந்தர் இருபத்து மூவர்; பக்கம் இருநூற்றைம்பது என்பவை குறிப்புகள்.

-

கதைக் களம் தஞ்சை, அரசன் குலோத்துங்கன், அவன் மகள் அமராவதி, கம்பர் புகழேந்தி - ஒட்டக்கூத்தர் என்னும் முப்பெரும் புலவர்கள் அணிசெய்த அரசு. ஒட்டக் கூத்தர் முதுவர்; கம்பர் மேல் அளவற்ற பொறாமையர்; நயமாக இடையூறு செய்யும் கோணர்; புகழேந்தியார் துணையும் மகளும் உளராக, அவர் மறைந்து விட்ட காலநிலை.

வி

கம்பர் இராமாயண அரங்கேற்றத் தடைப்பாடு; பல்சமயச் சால்புவிட்டு மாலிய வழி நூல் அரங்கேற்றத்தைக் கடவுள் வாழ்த்துக் கொண்டே வல்வாதிட்டு நிறுத்தித் தில்லையிலோ, திருவரங்கத்திலோ ஓராண்டளவில் அரங்கேற்றி மீளுமாறு கம்பரை விடுத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/30&oldid=1580552" இலிருந்து மீள்விக்கப்பட்டது